ப்ரா வகைகள் – 40 வெவ்வேறு ப்ரா வகைகள் மற்றும் ஸ்டைல்கள்

A

இன்று உள்ளாடைகளில் பல ப்ரா வகைகள் உள்ளன, ஆனால் ஒவ்வொன்றிற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரியுமா? பால்கனெட் ப்ராவில் இருந்து பிராலெட் ப்ரா வரை உங்களுக்கு அடையாளம் காண முடியுமா? கவலை வேண்டாம், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். சில முக்கிய ப்ராக்கள் மற்றும் அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என்று உங்களுக்கு வழிகாட்ட நாங்கள் விரும்புகிறோம். அதைப் பார்க்கலாமா?

ப்ரா வகைகள்

பல வகையான ப்ராக்கள் பல்வேறு நோக்கங்களுக்காகவும் வாடிக்கையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமான மற்றும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய சில ப்ராக்கள் பின்வருமாறு: தினசரி ப்ரா, டி-ஷர்ட் ப்ரா, வயர்டு ப்ரா, பால்கனெட் ப்ரா, ஸ்போர்ட்ஸ் பிரா, பேக்லெஸ் பிரா, பேட்டிங் செய்யப்பட்ட பிரா, பேட்டிங் இல்லாத பிரா, ஸ்டிக்-ஆன் ப்ரா, சீம்லெஸ் பிரா, லேஸ் பிரா மற்றும் பிரிண்டெட் ப்ராக்கள். இங்கே நீங்கள் 40 வகையான ப்ராக்களை ஆராய்ந்து, உங்களுக்குத் தேவையானவற்றை ஹைலைட் செய்து, மற்ற விருப்பங்களிலிருந்து அவை எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை அறியலாம்.

ப்ரா வகைகள் மற்றும் அவற்றின் பயன்கள்

1. புஷ்-அப் பிரா (Push-up Bra)

புஷ்-அப் பிராக்களை அடையாளம் காண்பது மிகவும் எளிது. அவை பொதுவாக டெமி கப்களைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட அளவிலான பேட்டிங்குடன் கிளிவேஜை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான புஷ்-அப் ப்ராக்களில் இயற்கையான லிப்டை வழங்குவதற்காக கப்களின் அடியில் அண்டர்வயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் மென்மையான லிப்டை விரும்புபவரா? இந்த ஸ்டைலை நீங்கள் தாராளமாக தேர்வு செய்யலாம்.

புஷ்-அப் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • டெமி கவரேஜ்
  • அதிக சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: பல்வேறு பேட்டிங் அளவுகள் (லெவல் 1, லெவல் 2, லெவல் 3)
  • ஃபேப்ரிக்: சாட்டின், நைலான் ஸ்பாண்டெக்ஸ், காட்டன் ஸ்பாண்டெக்ஸ், லேஸ்
  • பயன்பாடு: கேசுவல் வேர், பார்ட்டி வேர்
  • அளவுகள்: 30A முதல் 40B வரை

2. டி-ஷர்ட் பிரா (T-shirt Bra)

இது பெரும்பாலான பெண்களால் விரும்பப்படும் ஒரு பிரபலமான ஸ்டைலாகும். இவை பிரத்யேகமாக ப்ரா மற்றும் மார்பகங்களுக்கு இடையிலான இடைவெளியை அகற்ற வடிவமைக்கப்பட்டுள்ளன. டி-ஷர்ட் பிராவின் கப்புகள் சீம்லெசாக இருப்பதால் உங்கள் மார்பகங்களுக்கு ஏற்ற வடிவத்தை அளிப்பது மட்டுமன்றி அனைத்து விதமான ஆடைகளின் உட்பகுதிகளில் முற்றிலும் இன்விசிபிலாக காணப்படுகிறது. பாரம்பரியமாக இருந்தாலும் சரி, நவீனமாக இருந்தாலும் சரி, இது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்ற ஸ்டைலாகும்.

டி-ஷர்ட் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • மிதமான கவரேஜ், முழு கவரேஜ், டெமி கவரேஜ்
  • மீடியம் சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: மல்டிவே, சரிசெய்யக்கூடிய மற்றும் சரிசெய்ய முடியாத ஸ்ட்ராப்கள்
  • ஃபேப்ரிக்: காட்டன் ஸ்பான்டெக்ஸ், லேஸ், மெஷ், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ், பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு: டி-ஷர்ட்கள், ஃபார்மல் உடைகள்
  • அளவுகள்: 30D to 46B, S – 2XL

3. பால்கனெட் பிரா (Balconette Bra)

ஒரு பால்கனெட் ப்ராவை அதன் கப்புகள் மற்றும் ஸ்ட்ராப்களைக் கொண்டு எளிதில் அடையாளம் காணலாம், ஏனெனில் அவை மற்ற ஸ்டைல்களுடன் ஒப்பிடும்போது தனித்துவமான கட்களைக் (cut) கொண்டுள்ளன. கிளாசிக் டெமி ப்ராக்களை விட இயற்கையான கிளீவேஜ்களை உருவாக்க மற்றும் குறைவான கவரேஜை வழங்க இந்த வகை பிராக்களில் ஸ்ட்ராப்கள் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. இவை லேசுடன் இணைக்கப்பட்டதுமன்றி நடுத்தர கவரேஜ் மற்றும் மென்மையான லிப்ட் ஆகியவற்றை வழங்குகின்றன.

பால்கனெட் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th மற்றும் டெமி கவரேஜ்
  • குறைந்த முதல் நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: வாட்டர்ஃபால் ஸ்ட்ராப்ஸ், மென்மையான லேசு
  • ஃபேப்ரிக்: நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு: பிரைடல் உடைகள், லோ-கட் நெக் ஸ்டைல்கள், அகன்ற நெக் ஸ்டைல்கள்
  • அளவுகள்: 28 D to 38D, S to XL 

4. ஸ்போர்ட்ஸ் பிரா (Sports Bra)

ஸ்போர்ட்ஸ் ப்ராக்கள் வழக்கமான ப்ராக்களை விட இறுக்கமாக இருக்க வேண்டும், ஆனால் சுவாசத்தை கட்டுப்படுத்துமாறு இருக்கக்கூடாது. ஸ்ட்ராப்கள் மற்றும் தோள்களுக்கு இடையில் இரண்டு விரல்களை வைப்பதன் மூலம், ஸ்போர்ட்ஸ் ப்ரா உங்களுக்கு சரியாக பொருந்துகிறதா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம். மேலும் ஸ்போர்ட்ஸ் ப்ரா கப்களின் துணி மென்மையாக இருக்கிறதா என்று சரிபாருங்கள். பல்வேறு வகையான உடற்பயிற்சிகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறு ஸ்டைல்களில் ப்ராக்கள் இருப்பதால், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அதைத் தேர்ந்தெடுக்கவும்.

குறைந்த-இம்பாக்ட் ஸ்போர்ட்ஸ் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • குறைந்த சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: நீக்கக்கூடிய பேட்டிங் 
  • ஃபேப்ரிக்: காட்டன் ஸ்பான்டெக்ஸ், மெஷ், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ் 
  • பயன்பாடு: நடைபயிற்சி, பைலேட்ஸ், நீச்சல், ஸ்கேட்டிங் மற்றும் கோல்ஃப் 
  • அளவுகள்: S to XL

அதிக-இம்பாக்ட் ஸ்போர்ட்ஸ் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • அதிக சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: முன் திறக்கக்கூடிய ப்ரா மற்றும் ரேசர்பேக், வயர்ஃப்ரீ 
  • ஃபேப்ரிக்: பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு: ஜாகிங், கார்டியோ, ஜம்பிங் ஜாக்ஸ், நீளம் தாண்டுதல் 
  • அளவுகள்: L, XL, 2XL

நடுத்தர-இம்பாக்ட் ஸ்போர்ட்ஸ் பிராவின் முக்கிய அம்சங்கள்

  • நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: க்ரிஸ்-கிராஸ் ஸ்ட்ராப்கள், நீக்கக்கூடிய பேட்டிங்
  • ஃபேப்ரிக்: நைலான் ஸ்பான்டெக்ஸ், காட்டன் ஸ்பான்டெக்ஸ், பாலிமைட் ஸ்பான்டெக்ஸ், மெஷ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ் 
  • பயன்பாடு: பவர் வாக்கிங், நடனம், சைக்கிள் ஓட்டுதல், ஹைக்கிங், பனிச்சறுக்கு மற்றும் ஜிம் உடற்பயிற்சிகள்
  • அளவுகள்: S, M, L, XL, 2XL

5. ஸ்ட்ராப்லெஸ் ப்ரா (Strapless Bra)

ஏற்றுக்கொண்டாலும் ஏற்காவிட்டாலும், உங்கள் அலமாரியில் இருக்கும் ஸ்ட்ராப்லெஸ் கவுன்களும், ஆஃப் ஷோல்டர் ஆடைகளும் இந்த உள்ளாடைக்காக ஏங்குகின்றன. தற்போது இந்த ஸ்டைல் ப்ராக்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியமாகிவிட்டது. கப்களைத் தாங்க இந்த ப்ராக்களுக்கு ஸ்ட்ராப்கள் இல்லை என்றாலும் பேண்டின் உதவியோடு மார்பகங்களுக்குத் தேவையான சப்போர்ட்டை வழங்குகின்றன. எந்தவொரு ஆஃப் ஷோல்டர் ஆடைக்கும், இந்த வகை ப்ரா மகத்தான உதவியாக இருக்கும்.

ஸ்ட்ராப்லெஸ் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • டெமி கவரேஜ் மற்றும் அதிக கவரேஜ்
  • குறைந்த சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: ஸ்டிக்-ஆன், பேக்லெஸ் மற்றும் ஸ்ட்ராப்லெஸ்
  • ஃபேப்ரிக்: நைலான், விஸ்கோஸ் ஸ்பான்டெக்ஸ், காட்டன் ஸ்பான்டெக்ஸ், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ், சிலிக்கான் 
  • பயன்பாடு: ஸ்ட்ராப்லெஸ் மற்றும் ஆஃப் ஷோல்டர் ஆடைகள்
  • அளவுகள்: 32B – 36C, S, M, L

6. ப்ளஞ்ச் ப்ரா (Plunge Bra)

ப்ளஞ்ச் ப்ரா ஆழமான V கோரை நோக்கி மையமாக இருப்பதால், மார்பகங்களை ஒன்றாகத் தள்ளி, ஆழமான கிளீவேஜ்களை உருவாக்கி, கவர்ச்சியான மற்றும் இயற்கையான பெரிய மார்பளவு மாயையை உருவாக்குகிறது. அற்புதமான V-நெக்லைன்களுக்கு பொருத்தமானது ப்ளஞ்ச் ப்ரா ஸ்டைல்.

ப்ளஞ்ச் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th மற்றும் டெமி கவரேஜ்
  • குறைந்த சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: ஆழமான V நெக் 
  • ஃபேப்ரிக்: நைலான், காட்டன் ஸ்பான்டெக்ஸ், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ், சாடின் 
  • பயன்பாடு: ஆழமான நெக்லைன் ஆடைகள்
  • அளவுகள்: 30A – 40D,  S – 2XL

7. கன்வெர்ட்டிபிள் ப்ரா (Convertible Bra)

நீங்கள் பலவிதமான ஆடைகளை முயற்சிக்கும்போது கன்வெர்ட்டிபிள் ப்ராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இவை ஆல்-இன்-ஒன் ஐகானிக் பிராக்கள். ஸ்ட்ராப்லெஸ், ஹால்டர்நெக், ஒன் ஸ்ட்ராப், க்ரிஸ்-கிராஸ் மற்றும் கிராஸ் ஷோல்டர் ஆகியவை இந்த வகை ப்ரா மூலம் நீங்கள் அடையக்கூடிய 5 முக்கிய ஸ்டைல்கள் ஆகும்.

கன்வெர்ட்டிபிள் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி கவரேஜ் மற்றும் முழு கவரேஜ்
  • அதிக சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: கன்வெர்ட்டிபிள் ஸ்ட்ராப்ஸ் மற்றும் சீம்லெஸ் டி-ஷர்ட் கப்புகள்
  • ஃபேப்ரிக்: காட்டன் ஸ்பான்டெக்ஸ், பாலிமைடு ஸ்பான்டெக்ஸ், நைலான் விஸ்கோஸ் ஸ்பான்டெக்ஸ், காட்டன், டிஸ்போசபிள் எலாஸ்டிக், ஈவிஏ, லேஸ், மெஷ், மோடல், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ், பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ், சாடின் 
  • பயன்பாடு: ஃபார்மல் மற்றும் அன்றாட ஆடைகள்
  • அளவுகள்: 28D to 58D, XS to FZ

8. வயர்லெஸ் பிரா (Wireless Bra)

வயர்ஃப்ரீ அல்லது வயர்லெஸ் ப்ராக்கள் பொதுவாக மெல்லியதாகவும், போதுமான நீளத்தை உடையதாகவும் இருக்கும். இந்த ஸ்டைல் ப்ராக்களின் அடி பகுதியில் கம்பிகள் இல்லை என்றாலும் சிறந்த ஆதரவை வழங்கும்.

வயர்லெஸ் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி மற்றும் முழு கவரேஜ்
  • நடுத்தரம் முதல் குறைந்த சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: வயர்ஃப்ரீ மென்மையான கப்புகள்
  • ஃபேப்ரிக்: பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ், நைலான், விஸ்கோஸ் ஸ்பான்டெக்ஸ், காட்டன் ஸ்பான்டெக்ஸ், லேஸ், மெஷ், மோடல்
  • பயன்பாடு: அன்றாட ஆடைகள்
  • அளவுகள்: 32B to 52D, XS to 3XL

9. முழு கவரேஜ் பிரா (Full-Coverage Bra)

இதன் பெயரே எல்லாவற்றையும் சொல்கிறது. முழு-கவரேஜ் ப்ரா உங்கள் முழு மார்பளவுக்கும் உகந்த கவரேஜை வழங்குவதோடு மட்டுமின்றி உங்கள் கிளீவேஜ்களை மறைத்து மார்பக வெளித் தோற்றத்தைத் தவிர்க்க உதவுகிறது. முழு-கவரேஜ் ப்ரா வசதியான மற்றும் முழுமையாக மூடப்பட்ட அனுபவத்தை உறுதி செய்வதால், இது பெரிய மார்பக அளவு கொண்ட பெண்களால் விரும்பப்படுகிறது.

முழு கவரேஜ் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • கம்ப்ளீட் கவரேஜ்
  • அதிக சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: சப்போர்டிவ் பேட்டிங், அகன்ற ஸ்ட்ராப்ஸ்
  • ஃபேப்ரிக்: பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ், நைலான், விஸ்கோஸ் ஸ்பான்டெக்ஸ், காட்டன், காட்டன் ஸ்பான்டெக்ஸ், லேஸ் மெஷ், மோடல், நைலான் ஸ்பான்டெக்ஸ் 
  • பயன்பாடு: அன்றாட ஆடைகள்
  • அளவுகள்: 32B to 52D, XS to 2XL

10. டெமி பிரா (Demi Bra)

டெமி கவரேஜ் ப்ராக்களை அவற்றின் கப்களைக் கொண்டு எளிதில் அடையாளம் காண முடியும், ஏனெனில் அவை சுமார் 50 முதல் 75 சதவீத மார்பகங்களை மட்டுமே மறைக்கின்றன. அவற்றின் கம்பிகள் அகலமான U-வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மார்பகங்கள் அழகாகத் தென்படும். 

டெமி பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • டெமி அல்லது பாதி கவரேஜ்
  • நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: லேஸ் கப்,  நுட்பமான அம்சங்கள்
  • ஃபேப்ரிக்: காட்டன் ஸ்பான்டெக்ஸ், லேஸ், மெஷ், மோடல், நைலான் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு: குறைந்த கழுத்துள்ள ஆடைகள்
  • அளவுகள்: 30A to 44D, S to XL 

11. மினிமைசர் பிரா (Minimiser Bra)

இந்த வகையான பிராக்கள் பெரிய மார்பகங்களை சிறிதாகக் காட்ட பயன்படுத்தப்படுகின்றன.

மினிமைசர் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • முழு கவரேஜ்
  • அதிக சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: ஃபுல் பிரேம் கப், குஷன் ஸ்ட்ராப், யு பேக் சப்போர்ட்
  • ஃபேப்ரிக்: பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ், காட்டன் ஸ்பான்டெக்ஸ், லேஸ், மெஷ், நைலான் ஸ்பான்டெக்ஸ் 
  • பயன்பாடு:  ஃபார்மல் மற்றும் அன்றாட ஆடைகள்
  • அளவுகள்: 32 DD to 44E

12. மகப்பேறு/நர்சிங் பிரா (Maternity/Nursing Bra)

நர்சிங் ப்ரா பாலூட்டும் தாய்மார்களுக்கு அடிப்படையான ஒன்றாகும். இவற்றில் முன் திறக்கக்கூடிய கிளிப்கள்,  முழுவதுமாக திறக்கக்கூடிய கப்புகள், மென்மையான  ஃபேப்ரிக் போன்ற முக்கிய அம்சங்கள் இருப்பதால், தாயின் தோலில் எந்த எரிச்சலையும் ஏற்படுத்தாது. மேலும் இந்த ப்ராக்கள் பல்வேறு ஸ்டைல்களில் கிடைக்கின்றன.

நர்சிங் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி, மற்றும் முழு கவரேஜ்
  • அதிக சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: முன் திறக்கக்கூடியக் கிளிப்கள், ஃபாஸ்டனிங் கிளிப்புகள், வயர்ஃப்ரீ
  • ஃபேப்ரிக்: காட்டன் ஸ்பான்டெக்ஸ், நைலான் ஸ்பான்டெக்ஸ், லேஸ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ் 
  • பயன்பாடு:  பாலூட்டும் தாய்மார்களுக்கு
  • அளவுகள்: 32B to 44B, M to XXL

13. ஸ்டிக்-ஆன் பிரா (Adhesive/Stick-on Bra)

ஸ்டிக்-ஆன் ப்ராக்கள் உங்கள் மார்பகங்களில் எளிதில் ஒட்டிக்கொள்ளும் வகையில் உட்புற கப்களில் ஒட்டும் பசையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை ஸ்ட்ராப்லெஸ் மற்றும் பேக்லெஸ் ஆடைகளுக்கு ஏற்றவை. வழக்கமான ப்ரா போலல்லாமல், இந்த ஸ்டைல் மார்பகங்களை முழுமையாக மறைக்காது.

ஸ்டிக்-ஆன் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • டெமி கவரேஜ்
  • குறைந்த சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: ஸ்டிக்-ஆன், ஸ்ட்ராப்லெஸ், மற்றும் வயர்ஃப்ரீ
  • ஃபேப்ரிக்: நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ், டிஸ்போசபிள், சிலிக்கான்
  • பயன்பாடு:  ஸ்ட்ராப்லெஸ் மற்றும் லோ நெக் ஆடைகள் அல்லது பார்ட்டி உடைகளுக்கு
  • அளவுகள்: S to FZ

14. பிராலெட் (Bralette)

பிராலெட்டுகள் கம்பிகள் இல்லாதவாறு மோல்டெட் கப்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அவை அழகான அலங்காரங்களுடன் வடிவமைக்கப்பட்டதால் பார்ட்டி மற்றும் பண்டிகை உடைகளுக்கு ஏற்றவை. புதிதாக பிரா அணிபவர்களுக்கு அவை பொருத்தமானவை.

பிராலெட்டின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி, மற்றும் முழு கவரேஜ்
  • குறைந்த சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: லேஸ்டு லாங்லைன், சீம், ஸ்லிப்-ஆன்
  • ஃபேப்ரிக்: காட்டன் ஸ்பான்டெக்ஸ், லேஸ்
  • பயன்பாடு:  அவ்வப்போது அணியும் உடைகளுக்கு
  • அளவுகள்: 32C, S, M 

15. லாங்லைன் ப்ரா (Longline Bra)

இந்த ப்ராக்கள் கூடுதல் வசதிக்காகவும், விண்டேஜ் மற்றும் மென்மையான தோற்றத்திற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

லாங்லைன் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th மற்றும் முழு கவரேஜ்
  • நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: ஸ்லிப்-ஆன்
  • ஃபேப்ரிக்: நைலான் ஸ்பான்டெக்ஸ், நைலான், லேஸ்
  • பயன்பாடு:  தூக்க மற்றும் ஃபார்மல் உடைகள்
  • அளவுகள்: 32B to M, XL, 2XL

16. பேண்டோ ப்ரா (Bandeau Bra)

பேண்டோ அல்லது டியூப் ப்ரா என்பது ஸ்ட்ராப்கள், கொக்கிகள் மற்றும் மூடும் அம்சங்களுடனும் அல்லது இல்லாமலும் வரக்கூடிய ஸ்லிப்-ஆன் ஸ்டைல் ​​​​ப்ரா ஆகும். இந்த வகை ப்ரா அகன்ற முன் பேனலுடன் வருவதால் மார்பகத்தை மறைத்து, உகந்த ஆதரவை வழங்குகிறது. அவை ஆஃப் ஷோல்டர் மற்றும் ஸ்ட்ராப்லெஸ் ஆடைகளுக்கு ஏற்றவை.

பேண்டோ பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th மற்றும் முழு கவரேஜ்
  • நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: ஸ்லிப்-ஆன், ஸ்ட்ராப்லெஸ், மற்றும் வயர்ஃப்ரீ
  • ஃபேப்ரிக்: நைலான் ஸ்பான்டெக்ஸ், விஸ்கோஸ் ஸ்பான்டெக்ஸ், காட்டன் ஸ்பான்டெக்ஸ், நைலான்
  • பயன்பாடு:  ஸ்ட்ராப்லெஸ் மற்றும் ஆஃப் ஷோல்டர் ஆடைகள்
  • அளவுகள்: 32B to 36C, S, M

17. அண்டர்வயர் ​​பிரா (Underwire Bra)

அண்டர்வயர் ப்ராக்களில் கூடுதல் ஆதரவுக்காக கப்களின் அடிப்பகுதியில் கம்பி பொறுத்தப்பட்டிருக்கும். இது உங்கள் மார்பகங்களை சரியான இடத்தில் வைத்திருக்க உதவுகிறது. இந்த வகை ப்ராக்கள் வசதியாகவும், ஆதரவாகவும், அழகாகவும் இருக்கும்.

அண்டர்வயர் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி, மற்றும் முழு கவரேஜ்
  • அதிக சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: லேஸ், வயர்டு, மற்றும் மல்டிவே ஸ்ட்ராப்ஸ்
  • ஃபேப்ரிக்: நைலான் ஸ்பான்டெக்ஸ், நைலான், காட்டன், காட்டன் ஸ்பான்டெக்ஸ், லேஸ், மெஷ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ், பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு:  ஃபார்மல் மற்றும் அவ்வப்போது அணியும் உடைகள்
  • அளவுகள்: 28D to 42C, S, M, L 

18. பேட் செய்யப்பட்ட பிரா (Padded Bra)

இது ஒரு பிரபலமான ப்ரா வகையாகும். இதில் பேட்டிங் செய்யப்பட்டதால் இயற்கையாகவே மார்பகத்தைப் பெரிதாகவும் வட்டமாகவும் காட்டுகிறது. ப்ரா வகையைப் பொறுத்து பேட்டிங் நிலை வேறுபடலாம். பேட்டிங் செய்யப்பட்ட ப்ராக்களை நடைமுறையில் எந்த உடையுடனும்  அணியலாம்.

பேட் செய்யப்பட்ட பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th மற்றும் முழு கவரேஜ்
  • நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: தடையற்ற, மென்மையான பேட்டிங், அகன்ற விங்ஸ்
  • ஃபேப்ரிக்: நைலான் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு:  டி-சர்ட்கள் மற்றும் ஃபார்மல் உடைகள்
  • அளவுகள்: 28D to 44B, S to 2XL

19. ரேசர்பேக் பிரா (Racerback Bra)

ஸ்போர்ட்ஸ் ப்ராக்கள், முன் திறக்கக்கூடிய பிராக்கள் மற்றும் ஸ்லிப்-ஆன் போன்ற ப்ராக்கள் ரேசர்பேக்குகளைக் கொண்டுள்ளன. ரேசர்பேக் ப்ரா உங்கள் தோள்களில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து, முதுகுவலியை ஏற்படுத்தாமல் மார்பகத்தின் எடையை சமமாகத் தாங்குகிறது.

ரேசர்பேக் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th மற்றும் முழு கவரேஜ்
  • அதிக சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: சீம்லெஸ், மல்டிவே ஸ்ட்ராப்ஸ்
  • ஃபேப்ரிக்: பாலிமைட் ஸ்பான்டெக்ஸ், காட்டன் ஸ்பான்டெக்ஸ், மெஷ், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு:  டி-சர்ட்கள் மற்றும் ஃபார்மல் உடைகள்
  • அளவுகள்: 28D to 42C,  XS to 2XL

20. முன் மூடக்கூடிய ப்ரா (Front-Closure Bra)

முன்-மூடக்கூடிய ப்ராக்கள் முன்புறத்தில் ஒரு கொக்கி மற்றும் கண் மூடல் அல்லது கிளாஸ்ப்களைக் கொண்டிருக்கும். ப்ராக்களை பின்புறத்தில் அணிய சிரமப்படுபவர்களுக்கு இந்த வகை ப்ரா பொருத்தமானது. இது பெரும்பாலும் ஸ்டைலான பின்புற வடிவமைப்புகளுடன் வருகிறது.

முன் மூடக்கூடிய பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • டெமி மற்றும் முழு கவரேஜ்
  • நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: லேஸ்வொர்க், முன் மூடல், ஆடம்பரமான பின்புற வடிவமைப்புகள்
  • ஃபேப்ரிக்: நைலான் ஸ்பான்டெக்ஸ், காட்டன், லேஸ்
  • பயன்பாடு: எல்லா ஆடைகளுக்கும்  உபயோகம் செய்யலாம்   
  • அளவுகள்: 32B to 42D, S

21. பேக்லெஸ் ப்ரா (Backless Bra)

பேக்லெஸ் ப்ரா முதுகுப்பகுதியில் ட்ரான்ஸ்பரென்ட் ஸ்ட்ராப்களுடன் வருவதால் ஆஃப் ஷோல்டர் ஆடைகளின் கீழ் அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும்.

பேக்லெஸ் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th மற்றும் டெமி கவரேஜ்
  • நடுத்தரம் முதல் குறைந்த சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: ட்ரான்ஸ்பரென்ட் ஸ்ட்ராப்கள், டி-ஷர்ட் கப்புகள் 
  • ஃபேப்ரிக்: காட்டன் ஸ்பான்டெக்ஸ், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு:  பேக்லெஸ் உடைகள்
  • அளவுகள்: 32B to 40B,  S, M, L

22. சீம்லெஸ் ப்ரா (Seamless Bra)

சீம்லெஸ் ப்ராக்கள் மென்மையான கப்களுடன் வருவதால், அவை ப்ரா கோடுகளைக் காட்டாமல் ஆடைகளின் கீழ் கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாததாக மறைந்திருக்கும். இந்த ப்ராக்கள் வெவ்வேறு ஸ்டைல்களில் கிடைக்கின்றன, மேலும் அவற்றின் முக்கிய நோக்கம் ப்ரா லைன்களைத் தவிர்ப்பதாகும்.

சீம்லெஸ் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி, மற்றும் முழு கவரேஜ்
  • நடுத்தரம் முதல் அதிக சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: சீம்லெஸ் கப்ஸ், மல்டிவே ஸ்ட்ராப்ஸ்
  • ஃபேப்ரிக்: நைலான், விஸ்கோஸ் ஸ்பான்டெக்ஸ், காட்டன், காட்டன் ஸ்பான்டெக்ஸ், லேஸ், மெஷ், மோடல், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ், பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ், சாட்டின்
  • பயன்பாடு: ஃபார்மல் மற்றும் அவ்வப்போது அணியும் உடைகள்
  • அளவுகள்: 30A to 48D, XL to 3XL

23. ஹால்டர் பிரா (Halter Bra)

மல்டிவே ஸ்ட்ராப் ப்ராக்கள் மூலம், ஹால்டர், க்ரிஸ்-கிராஸ் போன்ற எந்த ஸ்டைலிலும் நீங்கள் பிராக்களை அணியலாம். ஹால்டர் பிராக்களில், ஸ்ட்ராப்கள் கழுத்தின் பின்பகுதியில் சேரும். ஸ்டைலான ப்ராக்களை ட்ரை செய்ய விரும்புவோருக்கு இது சரியானது.

ஹால்டர் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி, மற்றும் முழு கவரேஜ்
  •  அதிக சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: சீம்லெஸ், மல்டிவே ஸ்ட்ராப்ஸ்
  • ஃபேப்ரிக்: பாலிமைட் ஸ்பான்டெக்ஸ், காட்டன் ஸ்பான்டெக்ஸ், மெஷ், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு: டி-சர்ட்கள் மற்றும் ஃபார்மல் உடைகள்
  • அளவுகள்: 28D to 42C,  XS to 2XL

24. ஷீர் ப்ரா (Sheer Bra)

ஷீர் ப்ராக்கள் லேஸ் போன்ற மெல்லிய துணியால் தைக்கப்பட்டுள்ளதால் அவை வெளிப்படையானவை. இவற்றுள் லைனிங் மற்றும் பேட்டிங் எதுவும் இல்லாததால், இந்த ப்ராக்கள் உங்கள் இயற்கையான வடிவத்தைக் காட்டுகின்றன.

ஷீர் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி, மற்றும் முழு கவரேஜ்
  • குறைந்த முதல் நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: ஆடம்பரமான ஸ்ட்ராப், மெல்லிய லேஸ், நான்-பேட்டிங்
  • ஃபேப்ரிக்: லேஸ், காட்டன்,  காட்டன் ஸ்பான்டெக்ஸ், மெஷ், நைலான் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு: தனிப்பட்ட விருப்பம்
  • அளவுகள்: 30A to 48C

25. மென்மையான கப் ப்ரா (Soft Cup Bra)

இந்த ப்ரா காட்டன் போன்ற லைட் ஃபேப்ரிக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் உங்கள் சருமத்தில் மென்மையாக இருக்கும். இந்த வகை ப்ரா உங்கள் அன்றாட உடைகளுக்கு ஏற்றது. மென்மையான கப் ப்ராக்கள் சிறிய அல்லது பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களுக்கு ஏற்றவை.

மென்மையான கப் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th மற்றும் முழு கவரேஜ்
  • குறைந்த முதல் நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: 100% காட்டன், பால்கனி கப்
  • ஃபேப்ரிக்: 100% காட்டன்
  • பயன்பாடு: தினசரி பயன்பாட்டிற்கு
  • அளவுகள்: 32B to 52D

26. மோல்டட் ப்ரா (Moulded Bra)

ப்ரா கப்புகள் மோல்டிங் செய்யப்பட்டிருப்பதால், அவை மார்பகங்களில் சரியாக அமர்ந்து மென்மையான வடிவத்தை அளிக்கின்றன. மேலும், இது மார்பகங்களுக்கு கூடுதல் அளவை சேர்க்கிறது.

மோல்டட் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி, மற்றும் முழு கவரேஜ்
  • நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: மோல்டட் கப், மல்டிவே ஸ்ட்ராப்கள், பேட்டிங் செய்யப்படாதவை
  • ஃபேப்ரிக்: காட்டன் ஸ்பான்டெக்ஸ், காட்டன், மெஷ், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ், பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு: அன்றாட உபயோகம்,  ஃபார்மல் அல்லது பாரம்பரிய உடைகள்
  • அளவுகள்: 30B to 48C, XS to XXL

27. லேஸ் பிரா (Lace Bra)

ஒவ்வொரு பெண்ணுக்கும் லேஸ் பிரா மீது ஒரு மோகம் இருக்கும். லேஸ் எந்த வகை மார்பக வடிவத்துடனும் எளிதில் பொருந்தும். லேஸ் பிராக்கள் வெவ்வேறு ஸ்டைல்களிலும் வடிவங்களிலும் வருகின்றன.

 லேஸ் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி, மற்றும் முழு கவரேஜ்
  • குறைந்த முதல் நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: தைக்கப்பட்ட முழு கப்புகள், மல்டிவே ஸ்ட்ராப்கள்
  • ஃபேப்ரிக்: லேஸ், நைலான் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு: அவ்வப்போது அணியும் உடைகள்
  • அளவுகள்: 28D to 44D,  XS to M

28. அச்சிடப்பட்ட & வடிவமைப்புள்ள ப்ரா (Printed & Patterned Bra) 

அச்சுகளும் வடிவமைப்புகளும் உங்கள் அன்றாட வாழ்வில் அத்தியாவசியமானவை. தினசரி ப்ராக்கள் முதல் பேட்டிங் செய்யப்பட்ட ப்ராக்கள் வரை, பல ஸ்டைல்களில் கவர்ச்சிகரமான அச்சிடப்பட்ட ப்ராவை நீங்கள் காணலாம்.

அச்சிடப்பட்ட & வடிவமைப்புள்ள  பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி, மற்றும் முழு கவரேஜ்
  • குறைந்த முதல் நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: விலங்கு அச்சுகள், மென்மையான பேட்டிங்
  • ஃபேப்ரிக்: நைலான் ஸ்பான்டெக்ஸ், காட்டன், லேஸ், மெஷ்
  • பயன்பாடு:  ஃபார்மல் உடைகள்
  • அளவுகள்: 30B to 44D

29. எம்பெல்லிஷ்ட் பிரா (Embellished Bra)

எங்கள் உள்ளாடை வகைகளில் பெரும்பாலானவை அழகான வில் மற்றும் கல் அலங்காரங்களுடன் வருகின்றன. அவை எங்கள் தயாரிப்புகளுக்கு ஒரு தனித்துவமான அழகைச் சேர்க்கின்றன. எங்களின் பிரைடல் ப்ரா, ஃபேன்ஸி ப்ரா, லேஸ் ப்ரா ஆகியவற்றில் நிறைய அலங்காரங்களை நீங்கள் காணலாம்.

எம்பெல்லிஷ்ட் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி, மற்றும் முழு கவரேஜ்
  • அதிக முதல் நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: அழகான வில், சரிகை வேலை, மல்டிவே ஸ்ட்ராப்கள்
  • ஃபேப்ரிக்: பாலிமைட் ஸ்பான்டெக்ஸ், காட்டன் ஸ்பான்டெக்ஸ், மெஷ், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ், சாடின்
  • பயன்பாடு:  அவ்வப்போது அணியும் உடைகள்
  • அளவுகள்: 28D to 52D, XS to FZ

30. மெஷ் ப்ரா (Mesh Bra)

மெஷ் ப்ரா லேஸ் பிராவைப் போன்றது. அவை எடை குறைந்தவை, வெளிப்படையானவை, சுவாசிக்கக்கூடியவை மற்றும் ஸ்டைலான கண்ணோட்டத்தை வழங்குபவை. பல அன்றாட ப்ராக்கள், ஸ்போர்ட்ஸ் ப்ராக்கள் மற்றும் அலுவலக உடை ப்ராக்களில் மெஷ் பொருத்தப்பட்டிருக்கும். நீங்கள் தொடர்ந்து வொர்க் அவுட் செய்பவரா? உங்கள் அலமாரிகளில் ஓரிரு மெஷ் ப்ராக்களை வைத்திருப்பது சிறந்தது.

மெஷ் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி, மற்றும் முழு கவரேஜ்
  • குறைந்த முதல் நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: மெஷ்  ஒர்க், பேடெட் மற்றும் வயர்ஃப்ரீ
  • ஃபேப்ரிக்: பாலிமைட் ஸ்பான்டெக்ஸ், காட்டன் ஸ்பான்டெக்ஸ், மெஷ், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ், ஈவிஏ, லேஸ்
  • பயன்பாடு:  சாதாரண உடைகள், அன்றாட பயன்பாடு
  • அளவுகள்: 30A to 48C, XS to XXL 

31. கலர்-பிளாக் ப்ரா (Colour-Block Bra)

நீங்கள் போல்ட் மற்றும் மாறுபட்ட வண்ணங்களை விரும்புபவரா? ஆம் எனில், இந்த வகை ப்ரா உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கலர்-பிளாக் ப்ராக்கள் பலவிதமான நிறங்கள் மற்றும் டிசைன்களில் வருவதால், ஸ்டைலாக இருக்க விரும்புவோருக்கு இது ஏற்றது.

கலர்-பிளாக் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • அதிக கவரேஜ்
  • குறைந்த முதல் நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: வண்ணம்-தடுக்கப்பட்ட முன் பேனல், நீக்கக்கூடிய பேட்டிங்
  • ஃபேப்ரிக்: காட்டன் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு:  தனிப்பட்ட விருப்பம்
  • அளவுகள்: S to L 

32. சீம்டு பிரா (Seamed Bra)

வெட்டுக்கள் மற்றும் தையல்கள் இந்த வகை பிராவின் முக்கிய அம்சங்களாகும். சீம் செய்யப்பட்ட  கப்புகளின்  பல பகுதிகளை ஒன்றாகத் தைத்து, ஆதரவு மற்றும் லிஃப்ட் வழங்கும் ஒற்றை கப்பை உருவாக்குகின்றன. இவற்றின் தையல்கள் இயற்கையான வடிவத்தையும் லிப்டையும் உருவாக்குவதால், இது அன்றாட உடைகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

சீம்டு பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி, மற்றும் முழு கவரேஜ்
  • அதிக முதல் நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: மெஷ் ஒர்க், பேடெட் மற்றும் வயர்ஃப்ரீ
  • ஃபேப்ரிக்: காட்டன் ஸ்பான்டெக்ஸ், காட்டன், மெஷ், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ், பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ், சாடின்
  • பயன்பாடு:  சாதாரண உடைகள், அன்றாட பயன்பாடு
  • அளவுகள்: 28D to 58D, S to XXL

33. டார்ட்டட்  ப்ரா (Darted Bra)

ப்ரா கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, டார்ட்டட் ப்ராக்கள் உள்ளாடை ஸ்டைலில் பிரதானமாக உள்ளன. அவை மார்பகங்களை சுருக்கவும் வடிவமைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இதில் கப்களின் அடிப்பகுதியில் தொடங்கி நடுப்பகுதி வழியாகச் செல்லும் ஒரு தையல் உள்ளது. இந்த ஸ்டைல் ஒரு கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகிறது.

டார்ட்டட் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி, மற்றும் முழு கவரேஜ்
  • அதிக முதல் நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: பேடெட் மற்றும் வயர்ஃப்ரீ
  • ஃபேப்ரிக்: காட்டன் ஸ்பான்டெக்ஸ், மெஷ், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு:  சாதாரண உடைகள், அன்றாட பயன்பாடு
  • அளவுகள்: 30B to 42C  

34. ஸ்லீப் ப்ரா (Sleep Bra)

எனக்கு ஏன் ஸ்லீப் ப்ரா தேவை என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்! ஆனால் நீங்கள் இரவில் வசதியாகவும் நிம்மதியாகவும் உறங்க, உங்களுக்கு இந்த ஸ்லீப் ப்ரா கண்டிப்பாக தேவைப்படும். ஒவ்வொரு இரவும் உங்களைக் கவரும் வகையில் ஸ்லிப்-ஆன் ஸ்டைல் ​​மற்றும் மென்மையான துணிகளால் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்லீப் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th மற்றும் முழு கவரேஜ்
  • அதிக முதல் நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: சீம்லெஸ், வயர்ஃப்ரீ, ஸ்லிப்-ஆன்
  • ஃபேப்ரிக்: காட்டன் ஸ்பான்டெக்ஸ், மோடல், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு:  இரவு நேரத்தில்
  • அளவுகள்: 40D to 42C  

35. கேமி பிரா (Cami Bra)

கேமி ப்ராக்கள் வழக்கமான ப்ராக்கள் போலவே இருக்கும். ஆனால் கொக்கி மற்றும் கண் மூடல் இருக்காது. இவற்றை உள்ளாடையாக மட்டுமின்றி, புதிய ஸ்டைலை உருவாக்க, உங்கள் ஷீர் டாப்ஸ் மற்றும் லோ-கட் ஆடைகளுடனும் அணியலாம்.

கேமி பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • முழு கவரேஜ்
  • அதிக முதல் நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: சீம்லெஸ், வயர்ஃப்ரீ, ஸ்லிப்-ஆன்
  • ஃபேப்ரிக்: காட்டன் ஸ்பான்டெக்ஸ், லேஸ், மெஷ், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு:  டி’s மற்றும் டாப்ஸுடன் அணியலாம்
  • அளவுகள்: XS to XXL

36. பிகின்னர்ஸ் பிரா (Beginner’s Bra)

பெண் குழந்தைகளில் மார்பகங்கள் வளர ஆரம்பித்தவுடன், அவர்கள் ஆரம்பநிலை ப்ராவை அணிய வேண்டும். வழக்கமாக, இது ஸ்லிப்-ஆன் ஸ்டைலில் வருவதால் அவர்கள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறார்கள்.

பிகின்னர்ஸ் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th மற்றும் முழு கவரேஜ்
  • நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: சீம்லெஸ், வயர்ஃப்ரீ, ஸ்லிப்-ஆன்
  • ஃபேப்ரிக்: காட்டன் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு:  டி’s மற்றும் டாப்ஸுடன் அணியலாம்
  • அளவுகள்: XS to XL

37. பிளஸ் சைஸ் பிரா (Plus Size Bra)

பிளஸ் சைஸ் ப்ராக்கள் பெரிய மார்பகங்களை மறைப்பதற்கும் தாங்குவதற்கும் போதுமான விகிதாசார கப்களைக் கொண்டுள்ளன. ஒரு பிளஸ்-சைஸ் ப்ராவின் முக்கிய செயல்பாடு, மார்பக அளவைப் பொருட்படுத்தாமல், எந்த ஆடையிலும் உங்களை மிகவும் வசதியாக உணர வைப்பதாகும். 

பிளஸ் சைஸ் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th மற்றும் முழு கவரேஜ்
  • அதிக சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: பரந்த ஸ்ட்ராப்கள், அடுக்கு கப்புகள்
  • ஃபேப்ரிக்: காட்டன் ஸ்பான்டெக்ஸ், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ்
  • பயன்பாடு:  எந்த ஆடைகளுடனும் அணியலாம்
  • அளவுகள்: 30B to 52D

38. பிரைடல் பிரா (Bridal Bra)

பிரைடல் ப்ராக்கள் பொதுவாக சரிகையால் செய்யப்பட்டவை. இவை கவர்ச்சிகரமானதாகவும் மரியாதைக்குரியதாகவும் இருப்பதால் எந்தவொரு பெண்ணும் வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான பிராக்களில் இதுவும் ஒன்றாகும்.

பிரைடல் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி, மற்றும் முழு கவரேஜ்
  • அதிக சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: லேஸ்டு கப், பேடெட்
  • ஃபேப்ரிக்: நைலான், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ், சாடின்
  • பயன்பாடு:  எந்த சிறப்பு சமயங்களுக்கும் 
  • அளவுகள்: 28D to 48C

39. தினசரி பிரா (Everyday Bra)

நிச்சயமாக, இது அன்றாட உபயோகத்திர்க்காக உருவாக்கப்பட்ட பிரா. இந்த ப்ராக்கள் எளிமையாகவும் நேர்த்தியாகவும் இருப்பதால், அன்றாட உடைகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். தினசரி ப்ராக்கள் வெவ்வேறு ஸ்டைல்களிலும் வடிவமைப்புகளிலும் கிடைப்பதால் ஃபார்மல் மற்றும் சாதாரண உடைகளுக்கு ஏற்றதாகும்.

தினசரி பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th, டெமி, மற்றும் முழு கவரேஜ்
  • அதிக –  நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: லேஸ்டு கப், பேடெட்
  • ஃபேப்ரிக்: நைலான், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ், சாடின், காட்டன், காட்டன் ஸ்பான்டெக்ஸ், லேஸ், மெஷ், மோடல்
  • பயன்பாடு: தினசரி பயன்பாட்டிற்கு
  • அளவுகள்: 30B to 52D

40. உயர்ந்த சப்போர்ட் பிரா (High-support Bra)

கூடுதல் ஆதரவு தேவைப்பட்டால், உங்களுக்கு எப்பவும் கைகொடுக்கும் உயர்ந்த சப்போர்ட் ப்ராக்களைத் தேர்வு செய்யுங்கள். இதில் எம்-பிரேம் இருப்பதால் அதிகபட்ச ஆதரவை வழங்கும் போது அசௌகரியத்தைக் குறைக்கிறது.

உயர்ந்த சப்போர்ட் பிராவின் முக்கிய அம்சங்கள்:

  • 3/4th மற்றும் முழு கவரேஜ்
  • அதிக –  நடுத்தர சப்போர்ட்
  • சிறப்பம்சங்கள்: முழு கவரேஜ் கப், பரந்த ஸ்ட்ராப்ஸ்
  • ஃபேப்ரிக்:  நைலான், நைலான் ஸ்பான்டெக்ஸ், பாலிகாட்டன் ஸ்பான்டெக்ஸ், சாடின், காட்டன், காட்டன் ஸ்பான்டெக்ஸ், லேஸ், மெஷ், மோடல்
  • பயன்பாடு: தினசரி பயன்பாட்டிற்கு
  • அளவுகள்: 30B to 48D

மேற்கூறிய அனைத்தும் நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு ப்ரா வகைகள். இங்கே, ப்ராக்களின் வெவ்வேறு ஸ்டைல்களையும் அவற்றை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டியையும் வழங்கியுள்ளோம். எனவே வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ற பொருத்தமான பிராக்களைக் கண்டறிய எங்கள் பரிந்துரைகளைப் பின்பற்றுங்கள்.

Sign Up for Our Newsletter

TRENDING POSTS


Style Guide
Top Must-Buy New Year Lingerie-Get Ready for 2020!
Style Guide
Top Must-Buy New Year Lingerie-Get Ready for 2020!
Style Guide
Top Must-Buy New Year Lingerie-Get Ready for 2020!