பேண்டிஸ் துவைக்கும் முறை: கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

P
நாம் அணியும் உள்ளாடைகள் தான் நம்முடைய உடலை நேரடியாகத் தொடும் மிக நெருக்கமான ஆடைகள். அதனால் அவற்றைச் சுத்தமாகவும் மென்மையாகவும் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். பலருக்குத் தெரியாமல் சில பழக்கங்கள், உள்ளாடைகளின் ஆயுளையும் மென்மையையும் குறைத்துவிடுகின்றன.

துவைக்காமல் அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள் 

  • துர்நாற்றம்
  • பாக்டீரியா தொற்று
  • தோல் எரிச்சல் மற்றும் அரிப்பு
  • ஈஸ்ட் தொற்று
  • முகப்பரு மற்றும் தோல் பிரச்சனைகள்
இந்தச் சிறியதாகத் தோன்றும் பிரச்சினைகள் பின்னர் பெரிய சுகாதாரச் சிக்கல்களாக மாறக்கூடும். அதனால், உள்ளாடைகளைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

உள்ளாடைகளைச் சரியாகத் துவைப்பது எப்படி?

உள்ளாடைகள் மிகவும் மென்மையான துணிகளால் தயாரிக்கப்பட்டவை, எனவே அவற்றை துவைக்கும் போது சிறப்புக் கவனம் அவசியம். சரியான முறையில் துவைப்பது எப்படி என்பதை அறிய, தொடர்ந்து படியுங்கள்.

உள்ளாடைகளைக் கைகளில் துவைப்பதற்கான வழிமுறைகள்

சில உள்ளாடைகள் துவைக்கும்போது நிறம் மங்க வாய்ப்புள்ளது, எனவே உங்கள் உள்ளாடைகளைத் தனியாகத் துவைக்க மறக்காதீர்கள். (குறிப்பு: உங்கள் உள்ளாடைகளை தனித்தனியாகவோ அல்லது முழுவதுமாகவோ துவைப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பம்)
  • ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி நிரப்பவும்.
  • அதில் சிறிதளவு மென்மையான சோப்பு அல்லது மிதமான சலவைத் திரவத்தைச் சேர்க்கவும்.
  • உங்கள் உள்ளாடைகளை 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • சில நிமிடங்கள் மெதுவாகத் துவைத்து, எந்த சோப்பின் தடயமும் மிஞ்சாமல் இருப்பதைச் சரிபார்க்கவும்.
  • இப்போது மெதுவாக தண்ணீரை பிழிந்து, உலர வைக்கவும்.

உள்ளாடைகளை இயந்திரத்தில் துவைப்பதற்கான வழிமுறைகள்

நேரம் குறைவாக இருக்கும் போது, கையால் துவைப்பது சிரமமாக இருக்கலாம். அப்போது, துவைக்கும் இயந்திரம் உதவியாக இருக்கும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள் — துவைக்கும் இயந்திரம் உள்ளாடைகளுக்கு ஏற்றதல்ல.. அதனால், சற்றுக் கவனத்துடன் துவைப்பது அவசியம்.

துவைக்கும் முன் செய்ய வேண்டியவை

  • உள்ளாடைகளைத் தனியாகப் பிரித்தல் – மற்ற உடைகளுடன் சேர்த்து துவைக்கும்போது உள்ளாடைகள் சேதமடைய வாய்ப்புள்ளது.
  • லேசான டிட்டர்ஜென்ட் பயன்படுத்தவும் – அதிக சக்திவாய்ந்த சலவைத் திரவம் துணியின் மென்மையையும், நிறத்தையும் குறைத்துவிடும்.
  • லாண்டிரி பையைப் பயன்படுத்துதல் – மெஷ் லாண்டிரி பைகளைப் (mesh laundry bag) பயன்படுத்தினால், உள்ளாடைகள் இயந்திரத்தில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்கும்.
  • கறை நீக்க முற்படல் (Pre-treat) – ஏதேனும் கறைகள் இருந்தால், அவற்றை மெதுவாகக்  குளிர்ந்த நீரில் சோப்புப் பயன்படுத்தித் தேய்த்து முன்பே சுத்தம் செய்யுங்கள்.

துவைக்கும் போது கவனிக்க வேண்டியவை

  • இயந்திரத்தில் “டெலிகேட்” அல்லது “ஜென்டில்” துவைக்கும் முறையைத் தேர்வு செய்யுங்கள்.
  • குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள் – அதிக வெப்பமான நீர் உள்ளாடையின் இழுவைத்தன்மையை (elasticity) குறைத்துவிடும்.
  • இயந்திரத்தை அதிகமாக நிரப்பாதீர்கள். துணிகள் சுதந்திரமாகச் சுழலும் அளவு இடம் இருக்க வேண்டும்..
  • உள்ளாடைகளை அதன் உள் புறமாகத் திருப்பி துவையுங்கள். இது வண்ணம் மங்காமல் காக்கும்.

துவைத்த பிறகு

  • துவைத்த பின் நீரை மெதுவாகப் பிழிந்து, காய வையுங்கள்.
  • ட்ரையர் பயன்படுத்துவதைத் தவிருங்கள், ஏனெனில் அதிக வெப்பம் துணியின் வடிவத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் பாதிக்கும்.
  • நிழலில் காய வையுங்கள் – ஏனெனில் நேரடி வெயில் துணியின் நிறத்தை மங்கச் செய்யும்.

உங்கள் உள்ளாடைகளைச் சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைத்திருங்கள்

இப்போது நீங்கள் உள்ளாடைகளைச் சரியாக துவைப்பது எப்படி என்பதை கற்றுக் கொண்டீர்கள். இதன் முக்கிய நோக்கம் — அவற்றைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கச் செய்வது, இதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் சீராகவும் சுத்தமாகவும் இருக்கும்.அதனால், அடுத்த முறை உள்ளாடைகளைத் துவைக்கும்போது, இங்கே பகிரப்பட்ட குறிப்புகளை நினைவில் கொண்டு பின்பற்றுங்கள்!

Sign Up for Our Newsletter

TRENDING POSTS


Style Guide
Top Must-Buy New Year Lingerie-Get Ready for 2020!
Style Guide
Top Must-Buy New Year Lingerie-Get Ready for 2020!
Style Guide
Top Must-Buy New Year Lingerie-Get Ready for 2020!