Style Guide
முந்தைய பதிவில், ‘தாங்ஸ்’ பற்றிப் பார்த்தோம். இப்போது, அடுத்த பிரபலமான உள்ளாடையான ‘பிகினி’யை நோக்கி நமது பயணத்தைத் தொடங்குவோம்.
பிகினி என்ற வார்த்தை, சிலருக்குக் கடற்கரை வேடிக்கையை நினைவுக்குக் கொண்டுவரும், மற்றும் சிலருக்கு, அது ஒரு ஃபேஷன் உணர்வை நினைவுபடுத்தும். ஆனால் உண்மையில், பிகினி என்பது வெறும் ஆடை அல்ல; அது தன்னம்பிக்கையின் அழகான வெளிப்பாடு!
இங்கே, அவற்றின் முக்கியத்துவம், ஸ்டைல்கள், பொருத்தம் போன்றவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
பிகினி உள்ளாடைகள் தோல் மீது மென்மையாக அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. இவை, காற்றோட்டத்தையும், உராய்வின்றி பாதுகாப்பையும் வழங்குவதால் வெயில்காலங்களில் மிகவும் வசதியான தேர்வாகும்.
பிகினி உள்ளாடைகளின் வடிவமைப்பு, அம்சம், துணி மற்றும் கவரேஜ் ஆகியவை எந்த உடல் வடிவத்திற்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இவை தினசரி பயன்பாட்டிற்கும் சிறந்த தேர்வாக அமைகின்றன.
எம்பிராய்டரி அல்லது பின்னல் போன்ற சரிகை வடிவமைப்புகளைப் பயன்படுத்திக் குறைந்த உயரம் மற்றும் நடுத்தர கவரேஜுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது மணப்பெண்களுக்கான சிறந்த ஸ்டைலாகும். பெண்கள் தங்களது ஹனிமூன் அல்லது விசேஷ தினங்களில் ஸ்டைலிஷாகவும் ரொமான்டிக்காகவும் தோன்ற இந்த வகை பிகினியை பயன்படுத்தலாம்.
இந்த வகை பிகினி, மென்மையான நெசவு, எளிமையான வடிவமைப்பு, நல்ல ஆறுதல், முழு கவரேஜ் மற்றும் நல்ல ஸ்ட்ரெட்ச் ஆகியவற்றை வழங்குவதால் தினமும் அணிய ஏற்றது.
சிறப்பான தருணங்களில் லேஸ் பிகினி ஒரு அழகான மற்றும் நாகரீகமான தேர்வாக இருக்கும். நுணுக்கமான சரிகை வேலைப்பாடுகளால் வடிவமைக்கப்பட்டிருப்பதால், இது உங்கள் உள்ளாடைக்கு பெண்மையையும் ஸ்டைலையும் சேர்க்கிறது.
கர்ப்பகாலத்திலும் ஸ்டைலிஷாக இருக்க விரும்பும் பெண்களுக்கு மெட்டர்னிட்டி பிகினி சிறந்த தேர்வாக அமையும்.
இந்த வகை பிகினிகள் எலாஸ்தேன்(Elasthane) சேர்க்கப்பட்ட மெட்டீரியலால் உருவாக்கப்படுவதால் விரிவடையும் வயிற்றை அழுத்தமின்றி ஆதரிக்கின்றன. அதே சமயம் வயிறு மற்றும் கீழ் முதுகில் ஏற்படக்கூடிய அழுத்தத்தையும் வலியையும் குறைத்து, முழு நாளும் ஆறுதளாக இருக்க உதவுகின்றன.
இவை பிளஸ்-சைஸ் பெண்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை.
இந்த பிகினிகள், தேவையான ஃபிட், சுதந்திரம் மற்றும் கவர்ச்சியான தோற்றத்தை மட்டுமல்ல, அதே சமயம் அவர்களுக்கு ஏற்ற வசதியான பொருத்தத்துடன் சிறந்த ஆதரவும், முழுமையான கவரேஜையும் வழங்குகின்றன.
பிரிண்டட் பிகினிகள் தினசரி பயன்படுத்தத் தகுந்த ஒரு ஸ்டைலிஷ் தேர்வாக இருக்கின்றன.
இவை ப்ளோரல், பாக்ஸி, ஜியோமெட்ரிக், வாட்டர்கலர் போன்ற நவீன மற்றும் மெருகான பிரிண்ட் டிசைன்களில் கிடைக்கும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பிகினி வகைகளும் பெண்கள் தங்கள் தேவைகள் மற்றும் சந்தர்ப்பங்களைக் கருத்தில் கொண்டு சரியானதை எளிதாகத் தேர்ந்தெடுக்க உதவுகின்றன.