சிறிய மார்பளவு கொண்ட பிளஸ் சைஸ் பெண்களுக்கான ப்ரா ஸ்டைல்கள்
  • Home
  • Language
  • Tamil
  • சிறிய மார்பளவு கொண்ட பிளஸ் சைஸ் பெண்களுக்கான ப்ரா ஸ்டைல்கள்

சிறிய மார்பளவு கொண்ட பிளஸ் சைஸ் பெண்களுக்கான ப்ரா ஸ்டைல்கள்

A
சிறிய மார்பளவு கொண்ட பிளஸ் சைஸ் பெண்களுக்கான ப்ரா ஸ்டைல்கள்
பிளஸ் சைஸ் பெண்களுக்கு சிறிய மார்பகங்கள் இருப்பது பொதுவானது. ஆனால், அவர்களுக்கேற்ற சிறிய கப் ப்ராவைக் கண்டுபிடிப்பது எளிதான காரியம் அல்ல ஏனெனில் பிளஸ்-சைஸ் ப்ராக்கள் பெரும்பாலும் அகலமான ப்ரா பேண்டுகள் (bra bands), தடிமனான ப்ரா பட்டைகள் (bra straps) மற்றும் பெரிய கப்புகளால் வடிவமைக்கப்படுகிறன்றன. எனவே, சிறிய மார்பளவு கொண்ட பிளஸ்-சைஸ் பெண்களுகக்கான ப்ராக்களை எப்படி கண்டுபிடிப்பது? அதிர்ஷ்டவசமாக, உள்ளாடை உற்பத்தியாளர்கள் சிறிய மார்பளவுக்கு ஏற்ற சில பாணிகளைக் கொண்டுள்ளனர். அவற்றை இங்கே ஆராய்வோம்! சிறிய மார்பளவு கொண்ட  பிளஸ் சைஸ் பெண்களுக்கான ப்ரா பிரச்சனைகள்  

சிறிய மார்பளவு கொண்ட  பிளஸ் சைஸ் பெண்களுக்கான ப்ரா பிரச்சனைகள்

சிறந்த ப்ரா ஸ்டைல்களைக் கண்டுபிடிப்பதற்கு முன், சிறிய மார்பளவு கொண்ட பிளஸ் சைஸ் பெண்களுக்கு மிகவும் பொதுவான ப்ரா பிரச்சனைகளைப் புரிந்துகொள்வோம்.
  • பிளஸ்-சைஸ் ப்ராக்கள் அகலமான பட்டைகள் மற்றும் கப்புகளைக் கொண்டிருப்பதால், சில சமயங்களில், இது சிறிய மார்பளவுகளுக்கு பொருந்தாது. இதனால் ப்ரா மற்றும் மார்பகங்களுக்கு இடையே இடைவெளி ஏற்படுகிறது.
  • பெரிய அளவிலான ப்ராக்களில் பெரிய கப்புகள் உள்ளன, அவை அக்குள்களின் கீழ் அமர்ந்து, மார்பகங்களை மறைக்கின்றன. ஆனால், இது சிறிய மார்பளவுகளுக்கு பொருந்தாது. இது அக்குள் வரை நீண்டு எரிச்சலை ஏற்படுத்தும்.
  • சில உற்பத்தியாளர்கள் ப்ராவை வடிவமைக்கும்போது இந்தக் குறிப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் சீரற்ற கணக்கீடுகளின் அடிப்படையில் ப்ராக்களை பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ வடிவமைக்கிறார்கள்.

சிறிய மார்பளவு கொண்ட பிளஸ் சைஸ் பெண்களுக்கான ப்ராக்கள்

பால்கோனெட் பிரா (Balconette Bra)

Balconette சிறிய மார்பளவு கொண்ட பிளஸ் சைஸ் பெண்களுக்கான ப்ரா தேடுகிறீர்களா? முதலில் நாங்கள் பரிந்துரைப்பது பால்கோனெட் பிராக்கள் ஆகும். பால்கோனெட் கப்புகள் குறைந்த நெக்லைனைக் கொண்டுள்ளன, அவை மார்பகங்களைச் சமமாக மறைத்து, குறைவான கழுத்துப் பகுதிகளைக் கொண்ட உடைகளில் நேர்த்தியான தோற்றத்தைக் கொடுக்கும். இந்த ஸ்டைல் அனைத்து வகையான மார்பகங்களுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட பேட்களுடன் வருகிறது. அவை கப்புகளுக்குள் எந்த இடைவெளியும் இல்லாத சிறு தட்டையான மையப் பகுதியுடன் (flat centre gore) குறைந்த நெக்லைன் கொண்டிருப்பதால் உங்கள் மார்பகங்களை இடைவெளியின்றி எளிதாக இணைக்கின்றன.

ப்ளஞ்ச் ப்ரா (Plunge Bra)

Plunge Bra ப்ளஞ்ச் ப்ராவின் ஆழமான வி-கழுத்துப் பகுதி சிறிய மார்பகங்களுக்கு ஏற்றது. ஏனெனில் அது மார்பகங்களின் கீழ் பகுதியை மறைத்து ஆழமான கிளிவேஜ் தோற்றத்தை உருவாக்கும். சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு இது ஒரு சிறந்த ப்ரா ஸ்டைலாகும், ஏனெனில் கப்புகள் மார்பகங்களை மறைத்து, முழுமையான தோற்றத்தை உருவாக்குகின்றன.

புஷ்-அப் ப்ரா (Pushup Bra)

Push-up Bra கனமான மார்பகங்களைக் கொண்ட பிளஸ்-சைஸ் பெண்களுக்கு புஷ்-அப் பிராக்கள் பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், உங்களுக்கு சிறிய மார்பகங்கள் இருந்தால் அவை பொருத்தமானவை. புஷ்-அப் பிராக்கள் சரியான லிப்ட்டை வழங்குகின்றன மற்றும் மார்பகத்திற்கும் கப்புகளுக்கும் இடையிலான இடைவெளிகளை வெவ்வேறு அளவிலான பேட்ககளால் நிரப்புகின்றன. புஷ்-அப் ப்ரா உதவியுடன் உங்கள் மார்பகங்களுக்கு எளிதாக அளவை கூட்டலாம்.

3/4வது கவரேஜ் கொண்ட டி-ஷர்ட் ப்ரா (T-shirt Bras with 3/4th Coverage)

T-shirt bra with 3/4th coverage  உங்களுக்கு சிறிய மார்பகங்கள் இருந்தால், முழு கப்புகள் (full cup) அல்லது முழு கவரேஜ் (full coverage) கொண்ட ப்ரா அணிய வேண்டாம். உங்கள் சிறிய மார்பகங்களுக்கு இடமளிக்க 3/4 கவரேஜ் அல்லது டெமி-கவரேஜ் (Demi-coverage) கொண்ட டி-ஷர்ட் பிராக்களை எப்போதும் தேர்வு செய்யுங்கள். இது உங்கள் சிறிய மார்பகங்களை இடைவெளியின்றி ஏற்றுக்கொள்ள உதவும்.

பேட்டிங்(Padding) இல்லாத பிராக்களை தேர்வு செய்யவும்

Choose Non-Padded Bras in Different Fabrics உங்கள் ப்ரா கப்புகளில் நிறைய இடைவெளிகள் இருப்பதை நீங்கள் கவனித்தால், உங்கள் மார்பகங்களின் அளவு மற்றும் வடிவத்திற்கு ஏற்ப பேட் செய்யப்படாத ப்ரா ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இந்த பிராக்கள் இயற்கையான தோற்றத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் போதுமான பொருத்தத்தையும் ஆதரவையும் வழங்குகின்றன. முழு உருவப் பெண்களுக்கு உதவ, மெஷ், லேஸ் அல்லது இயற்கை துணிகளால் செய்யப்பட்ட பேட் இல்லாத ப்ராக்களை முயற்சிக்கவும்.

வேறு ப்ரா ஸ்டைல்களை மற்றும் வகைகளை முயற்சிக்கலாம்

Go for different bra styles and types சிறிய மார்பளவு கொண்ட  பிளஸ் சைஸ் பெண்களுக்கான ப்ரா பரிந்துரைகளை நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்! நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
More Articles