பிகினி என்றால் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  • Home
  • Language
  • Tamil
  • பிகினி என்றால் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

பிகினி என்றால் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

A
பிகினி என்றால் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

முந்தைய பதிவில், 'தாங்ஸ்' பற்றிப் பார்த்தோம். இப்போது, ​​அடுத்த பிரபலமான உள்ளாடையான 'பிகினி'யை நோக்கி நமது பயணத்தைத் தொடங்குவோம்.

பிகினி என்ற வார்த்தை, சிலருக்குக் கடற்கரை வேடிக்கையை நினைவுக்குக் கொண்டுவரும், மற்றும் சிலருக்கு, அது ஒரு ஃபேஷன் உணர்வை நினைவுபடுத்தும். ஆனால் உண்மையில், பிகினி என்பது வெறும் ஆடை அல்ல; அது தன்னம்பிக்கையின் அழகான வெளிப்பாடு! 

இங்கே, அவற்றின் முக்கியத்துவம், ஸ்டைல்கள், பொருத்தம் போன்றவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். 

பிகினி உள்ளாடைகளை அணிவதன் முக்கியத்துவம் என்ன?

பிகினி அணிவதன் முக்கியத்துவம்

பிகினி உள்ளாடைகள் தோல் மீது மென்மையாக அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டவை.  இவை, காற்றோட்டத்தையும், உராய்வின்றி பாதுகாப்பையும் வழங்குவதால் வெயில்காலங்களில் மிகவும் வசதியான தேர்வாகும்.  

பிகினி உள்ளாடைகளின் வடிவமைப்பு, அம்சம், துணி மற்றும் கவரேஜ் ஆகியவை எந்த உடல் வடிவத்திற்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இவை தினசரி பயன்பாட்டிற்கும் சிறந்த தேர்வாக அமைகின்றன.

பிகினியின் பிரபலமான வகைகள் என்னென்ன?

பிகினி என்பது நவீன கால கட்டத்தின் ஸ்டைலும் சௌகரியமும் இணைந்த ஒரு உள்ளாடை. இன்று பல்வேறு தேவைகளுக்கும், உடலளவுக்கும், ஏற்றவாறு பிகினி வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கே பிகினியின் பிரபலமான சில வகைகளைப் பார்ப்போம்:

1. பிரைடல் பிகினி (Bridal Bikini)

பிரைடல் பிகினி

எம்பிராய்டரி அல்லது பின்னல் போன்ற சரிகை வடிவமைப்புகளைப் பயன்படுத்திக் குறைந்த உயரம் மற்றும் நடுத்தர கவரேஜுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது மணப்பெண்களுக்கான சிறந்த ஸ்டைலாகும். பெண்கள் தங்களது ஹனிமூன் அல்லது விசேஷ தினங்களில் ஸ்டைலிஷாகவும் ரொமான்டிக்காகவும் தோன்ற இந்த வகை பிகினியை பயன்படுத்தலாம். 

2. கேசுவல் பிகினி (Casual Bikini)

கேசுவல் பிகினி

இந்த வகை பிகினி, மென்மையான நெசவு, எளிமையான வடிவமைப்பு, நல்ல ஆறுதல், முழு கவரேஜ் மற்றும் நல்ல ஸ்ட்ரெட்ச் ஆகியவற்றை வழங்குவதால் தினமும் அணிய ஏற்றது.

3. லேஸ்வொர்க் பிகினி (Lacework Bikini)

லேஸ்வொர்க் பிகினி

சிறப்பான தருணங்களில் லேஸ் பிகினி ஒரு அழகான மற்றும் நாகரீகமான தேர்வாக இருக்கும். நுணுக்கமான சரிகை வேலைப்பாடுகளால் வடிவமைக்கப்பட்டிருப்பதால், இது உங்கள் உள்ளாடைக்கு பெண்மையையும் ஸ்டைலையும் சேர்க்கிறது.

4. மெட்டர்னிட்டி பிகினி (Maternity Bikini)

மெட்டர்னிட்டி பிகினி

கர்ப்பகாலத்திலும் ஸ்டைலிஷாக இருக்க விரும்பும் பெண்களுக்கு மெட்டர்னிட்டி பிகினி சிறந்த தேர்வாக அமையும். 

இந்த வகை பிகினிகள் எலாஸ்தேன்(Elasthane) சேர்க்கப்பட்ட மெட்டீரியலால் உருவாக்கப்படுவதால் விரிவடையும் வயிற்றை அழுத்தமின்றி ஆதரிக்கின்றன. அதே சமயம் வயிறு மற்றும் கீழ் முதுகில் ஏற்படக்கூடிய அழுத்தத்தையும் வலியையும் குறைத்து, முழு நாளும் ஆறுதளாக இருக்க உதவுகின்றன.

5. பிளஸ்-சைஸ் பிகினி (Plus-Size Bikini)

பிளஸ்-சைஸ் பிகினி

இவை பிளஸ்-சைஸ் பெண்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை.

இந்த பிகினிகள், தேவையான ஃபிட், சுதந்திரம் மற்றும் கவர்ச்சியான தோற்றத்தை மட்டுமல்ல, அதே சமயம் அவர்களுக்கு ஏற்ற வசதியான பொருத்தத்துடன் சிறந்த ஆதரவும், முழுமையான கவரேஜையும் வழங்குகின்றன.

6. பிரிண்டட் பிகினி (Printed Bikini)

பிரிண்டட் பிகினி

பிரிண்டட் பிகினிகள் தினசரி பயன்படுத்தத் தகுந்த ஒரு ஸ்டைலிஷ் தேர்வாக இருக்கின்றன.

இவை ப்ளோரல், பாக்ஸி, ஜியோமெட்ரிக், வாட்டர்கலர் போன்ற நவீன மற்றும் மெருகான பிரிண்ட் டிசைன்களில் கிடைக்கும்.  

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பிகினி வகைகளும் பெண்கள் தங்கள் தேவைகள் மற்றும் சந்தர்ப்பங்களைக் கருத்தில் கொண்டு சரியானதை எளிதாகத் தேர்ந்தெடுக்க உதவுகின்றன.

பிகினியை சரியான பொருத்தத்திற்கு எவ்வாறு தேர்வு செய்வது?

பிகினி பற்றிய அடிப்படைகள் மற்றும் அதன் வகைகள் பற்றி தெரிந்து கொண்டீர்கள். அடுத்து, உங்கள் உடலமைப்பிற்கேற்ப சரியான பிகினியை எவ்வாறு தேர்வு செய்வது என்று பார்ப்போம்.

1. சைஸ் 

உங்கள் பிகினியில் சௌகரியமாகவும் நம்பிக்கையுடனும் உணர சரியான அளவைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். உங்கள் உடல் வகைக்கு ஏற்ற சரியான அளவைக் கண்டுபிடிக்க, பேன்ட்டி சைஸ் கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்

பிகினி உள்ளாடைகள் XS முதல் 5XL வரை பல்வேறு அளவுகளில் கிடைப்பதால், உங்கள் உடலுக்கு ஏற்ற அளவை நீங்கள் எளிதாகத் தேர்வு செய்யலாம்!

2. துணி (Fabric) 

காட்டன் துணி மென்மையாகவும் சுவாசிக்கக்கூடியதாகவும் இருப்பதால், அன்றாட பயன்பாட்டிற்கு சிறந்த தேர்வாகும். 

அதே சமயம், பிகினி உள்ளாடைகள் பல்வேறு வகையான துணிகளில் கிடைப்பதால், அவற்றைப் பற்றியும் அறிந்து கொள்வதும் நல்லது. ஏனென்றால் உங்கள் அன்றாட மற்றும் சிறப்புத் தேவைகளுக்கு ஏற்ப தனித்தனி உள்ளாடைகளை வைத்திருப்பது மிகவும் புத்திசாலித்தனமான தேர்வாகும்.

காட்டன் ஸ்பான்டெக்ஸ்  – இது மென்மையையும், உடலோடு ஒட்டியிருக்கும் தன்மையையும் ஒருசேரக் கொண்டது. தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றது.

லேஸ் – மென்மையானதாகவும், அழகாகவும் இருக்கும் லேஸ் உள்ளாடைகள், ஸ்டைலான தோற்றத்தைத் தரும். இது பெரும்பாலும் சிறப்பு நாட்களில் அணிய உகந்தது.

மொடல் – மிருதுவான, பட்டு போன்ற உணர்வைத் தரும் இந்தத் துணி, மிகுந்த சௌகரியத்தை அளிக்கும்.

நைலான் ஸ்பான்டெக்ஸ் – இந்த உறுதியான, நெகிழ்வான துணி நல்ல பிடிமானத்தை வழங்குகிறது மற்றும் உடற்பயிற்சிகளுக்கு ஏற்றது.

பாலியஸ்டர் ஸ்பான்டெக்ஸ் – இது உடலைச் செதுக்கி காட்டும் உள்ளாடைகளுக்கு சிறந்த தேர்வு.

பிகினி பற்றிய இந்த விரிவான தகவல்கள், உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இப்போது ‘தாங்’ மற்றும் ‘பிகினி’ எவ்வாறு மாறுபடுகின்றன என்பதையும் அறிந்திருப்பீர்கள்.

உங்கள் தனிப்பட்ட ஸ்டைலுக்கும், தேவைகளுக்கும் ஏற்ற பிகினியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஒவ்வொரு நாளையும் சிறப்பானதாக்குங்கள்!

More Articles