பெண்கள் பிரா அணிவத
  • Home
  • Language
  • Tamil
  • பெண்கள் பிரா அணிவது ஏன்? நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்

பெண்கள் பிரா அணிவது ஏன்? நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்

M
பெண்கள் பிரா அணிவது ஏன்? நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்

நீங்கள் 11 முதல் 13 வயதை அடைந்த பிறகு, பிரா (bra) அணிய அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதற்கான காரணங்களை அறிய விரும்புகிறீர்களா? உங்கள் பாட்டி, அம்மா, அக்கா, தங்கை, உறவினர் அல்லது நண்பர்கள் இதை உங்களுடன் பகிரவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பெண்கள் பிரா அணிவது ஏன் என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் உங்களுக்கு சொல்லி தருகிறோம்.

பெண்கள் பிரா அணிவது ஏன்

 

பெண்கள் பிரா அணிவது ஏன்? உண்மையான காரணங்கள்

ப்ரா என்பது பெண்களின் உள்ளாடை வகைகளில் முக்கியமான ஒரு பகுதியாகும். பிரா அணிவது மார்பகங்களை ஆதரித்து தொடர்ச்சியான சௌகரியம் அளிக்கிறது. இது ஆதரவு அளிப்பதோடு மட்டும் இல்லாமல், மார்பகங்களை ஒழுங்காகவும், அழகாகவும் , நேர்த்தியாகத் தோன்றும்படி வடிவமைக்க உதவுகிறது.  

மார்பகங்களின் எடையை தாங்கிக்கொள்கிறது 

பிரா அணிவதன் மூலம் உங்கள் மார்பகங்களுக்கு தேவையான சப்போர்ட் மற்றும் கம்போர்ட் கிடைக்கிறது. உங்கள் மார்பகங்களின் எடையை பிரா தாங்கிக்கொள்வதன் மூலம் நீங்கள் தினசரி வேலைகளை மகிழ்ச்சியாக தொடரலாம். 

தன்னம்பிக்கையும் மஉறுதியும்

கரெக்ட் சைஸ் பிரா (Correct size bra) அணிவதன் மூலம் நீங்கள் தன்னம்பிக்கையுடன் தினசரி வேலைகளை செய்யலாம். உங்கள் மார்பகங்களுக்கு தேவையான சப்போர்ட் கிடைப்பதால், நீங்கள் எந்த ஆடை அணிந்தாலும் அழகான தோற்றதை தரும். அழகான ஆடை மற்றும் அழகான தோற்றம் இருந்தால் தன்னம்பிக்கையும் மன உறுதியும் சேர்ந்தே வந்துவிடும் அல்லவா?

அசௌகரியங்களை தவிர்க்க உதவும் 

பெண்களின் ஹார்மோன்கள் எப்படி மாறும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. பீரியட்ஸ் ஹார்மோன்கள், பிரக்னன்சி  ஹார்மோன்கள், மெனோபாஸ், என பல விதமான காரணங்களால் மார்பகங்களில் வலி (breast pain) மற்றும் அசௌகரியம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பிரா அணிவதன் மூலம் இந்த அசௌகரியங்களை தவிர்க்க முடியும். 

அழகிய தோற்றத்தை தருகிறது

அழகிய தோற்றத்தை தருகிறது

பெண்களின் அழகிய மார்பகங்களை மேலும் அழகூட்டகுடியது பிராக்கள். different types of breasts) ஏற்றவாறு அமைக்கப்பட்டு அழகிய தோற்றத்தை தருகிறது. 

மார்பகங்களுக்கு தேவையான  சப்போர்ட்

அணைத்து மார்பகங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இளம் பெண்களின் மார்பகங்கள் வளரும் நிலையிலும், கன்னியரின் மார்பகங்கள் வளர்ந்த நிலையிலும், குழந்தை பிறந்த தாய்மார்களின் மார்பகங்கள் சற்று பெரிதாகவும், மெனோபாஸ் ஆன பெண்களின் மார்பகங்கள் தளர்வாகவும் காணப்படுகின்றன. பெண்கள் கண்டிப்பாக பிரா அணிய வேண்டும் ஏன் என்றால் மார்பகங்களுக்கு தேவை படுகின்ற சப்போர்ட் & ஸ்ட்ரென்த் ஒரு பிராவால் மட்டும் தான் தரமுடியம். உதாரணத்திற்கு, மினிமைசர் பிரா (Minimiser bra) தளர்வான மார்பகங்களுக்கு சப்போர்ட் தர கூடியவையாக அமையும். ஆகவே  பெண்கள் பிரா அணிவது ஏன் என்ற கேள்விக்கு ஏதுவாக பல வகையான பிராக்கள் கடைகளில் கிடைக்கிறது. 

மார்பகங்களுக்கு பாதுகாப்பு 

பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரா மிகவும் அவசியமான ஒன்று. நர்சிங் பிரா (nursing bra) தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஏற்றவாறு எளிதில் கழற்றி மாட்டும் வசதியுடன் அமைக்க பட்டிருக்கும். இவை திக் பேண்ட் மற்றும் வைடு ஸ்ட்ராப்ஸ் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால் மார்பகங்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவும், சப்போர்ட்டும் அளிக்கிறது. எனவே புதிதாய் குழந்தை பிறந்த தாய்மார்கள் நிச்சயம் நல்ல பிரா அணிய வேண்டும்.

உடல்வாகு சீராக்க உதவுகிறது 

அது மட்டும் அன்றி, பிரா முதுகு வலி, மார்பக வலியை தடுக்க உதவும். பெண்கள் பிரா அணிவது ஏன் என்று கேட்கும் அனைவரும் இதை தெரிந்து கொள்ள வேண்டும். ப்ரா அணிவதன் மூலம் தங்களின் தோரணை (posture) பாதிக்க படாமல் இருக்கும். ஒருவர் தொடர்ந்து கரெக்ட் சைஸ் பிரா அணிவதால் உடல்வாகு சீராக இருக்கும். கனமான மார்பகங்கள் இருப்பவர்கள் கட்டாயம் நல்ல பிரா அணிய வேண்டும். 

சென்சிட்டிவிட்டியை குறைக்க உதவுகிறது 

சென்சிட்டிவ் மார்பகங்கள் இருப்பவரா நீங்கள்? பருத்தியில் ஆன பிரா (cotton bra) அல்லது சாப்ட் பிரா (soft bra) அணிவதனால் உங்கள் மார்பகங்கள்  பாதுகாப்பாக இருக்கும். எரிச்சல், வலி மற்றும் அசௌகரியம் இல்லாமல் இயல்பாக தினசரி வேலையை தொடரலாம். 

பிரா அணிவது ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டது. சில பெண்களுக்கு பிரா அணிவது வசதியாக இருக்கும், சிலருக்கு  அவசியமான ஒன்றாக இருக்கும், மற்றவர்களுக்கு அது தினசரி ஆடைகளைப் போலவே வழக்கமாக மாறிவிடும். அனைவருக்கும் ஆடை சுதந்திரம் இருப்பது போல பிரா அணிவதிலும் சுதந்திரம் உள்ளது. 

பெண்கள் பிரா அணிவது ஏன் என்ற விளக்கம் சரியாக உள்ளது என்று நம்புகிறோம்.  பிரா அணிவதனால் அணைத்து மார்பக பிரச்சனைகளை சீர் செய்ய முடியாது ஆனால் சில தொந்தரவுகள் வராமல் தவிர்க்கலாம். சரியான பிரா அணிவது நிச்சயமாக மார்பகங்களுக்கு தேவையான சப்போர்ட் (support) கொடுக்கும் என்பது உண்மையே! 

இந்த பதிவை ஆங்கிலத்தில் படிக்க Click Here

More Articles