போன பதிவில், பெண்கள் ஏன் ப்ரா அணிய வேண்டும் என்ற கேள்விக்கு விளக்கம் அளித்திருந்தோம். இப்பதிவில் நர்சிங் பிராக்கள் மற்றும் அவற்றின் வரலாறு, பயன்பாடுகள், விளக்கங்கள், வகைகள் என அனைத்தையும் விளக்கியுள்ளோம். இங்கு கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும், புதிதாய் குழந்தை பெற்றவர்களுக்கும் தேவையான பிராக்களை பற்றி தெளிவு படுத்தியுள்ளோம்.
பெண்களின் கர்ப்ப காலத்திற்கு தேவைப்படும் நர்சிங் பிராக்கள்
நர்சிங் பிராக்களை அணிவது அவசியம்.
கர்ப்ப காலங்களில் உங்கள் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை பற்றி நன்கு அறிவதன் மூலம் நீங்கள் சரியான பிராக்களை வாங்க முடியும். கர்ப்பத்திற்குப் பிறகு மார்பகங்கள் எவ்வாறு தொய்வடையக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டால் நீங்கள் முழு ஆதரவு அளிக்கும் பிராக்களை அணிந்து கொண்டு மார்பகங்களை பாதுகாக்கலாம்.
உங்கள் கர்ப்பம் முழுவதும் மார்பகத்தின் அளவு மாறுபடலாம். சரியான பொருத்தம் மற்றும் ஆதரவை உறுதிப்படுத்த இந்த காலகட்டத்தில் உங்கள் ப்ரா அளவை தவறாமல் மறு அளவீடு செய்வது அவசியம்.
நர்சிங் ப்ரா என்றால் என்ன?
நர்சிங் பிராக்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை வசதியாக கழற்றி மாட்டும் படியான கப்புகள், பெரிய பேண்ட், மற்றும் எளிதாக அணுகுவதற்கான நர்சிங் கிளாஸ்ப்கள் கொண்டு வடிவமைக்க படுகின்றன. அது மட்டும் அன்றி கர்ப்ப காலத்தில் ஏற்படும் மார்பக அளவின் மாற்றங்களையும் மனதில் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளன. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பால் ஊட்டும் தாய்மார்கள் நர்சிங் ப்ரா அணிவதனால் பயன் பெறுவார்கள்.
நர்சிங் ப்ராவின் வரலாறு
இது புதிய தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். மெய்டன்ஃபார்மைச் சேர்ந்த நர்சிங் பிரேசியர்” என்று அழைக்கப்படும் மகப்பேறு ப்ரா-க்கான முதல் காப்புரிமையைப் பெற்றார். பாலூட்டும் தாய்மார்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்காக இந்த ப்ரா சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, மகப்பேறு பிராக்கள் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு உட்பட்டுள்ளன மற்றும் தாய்மார்களின் விருப்பங்களின் அடிப்படையில் வெவ்வேறு பெயர்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
நர்சிங் ப்ராவின் பிற பெயர்கள்
ஒவ்வொரு பெயரும் தாய்மையின் பல்வேறு நிலைகளுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட அம்சத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த பிராக்கள் வெவ்வேறு பெயர்கள் கொண்டிருப்பதால் உங்கள் தேவை அறிந்து சரியான பிராக்களை தேர்வு செய்வது எளிதாக அமையும்.
பிராவின் பெயர் | பெயர் காரணம் |
பிரெஸ்ட் பம்ப் ப்ரா (Breast pump Bra) | தாய்ப்பாலை பம்ப் செய்யும் தாய்மார்களால் பயன்படுத்தப்படும் பிரா. |
மெட்டர்னிட்டி ப்ரா/ மகப்பேறு பிரா (Maternity Bra)/ பிரெக்னென்சி ப்ரா (Pregnancy Bra) | கர்ப்பமான பெண்கள் பயன்படுத்தும் பிரா. |
நர்சிங் ப்ரா (Nursing Bra)/ பிரெஸ்ட்பீடிங் ப்ரா (Breastfeeding Bra)/ பீடிங் ப்ரா (Feeding Bra) | குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் போது அணியக்கூடிய பிரா. |
நர்சிங் பிராக்களின் அத்தியாவசிய அம்சங்கள், செயல்பாடுகள் மற்றும் நன்மைகள்
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் தனித்துவமான தேவைகளை நர்சிங் பிராக்கள் பூர்த்தி செய்கின்றன. அவை தாய்ப்பால் குடுக்க எளிதான கப்கள், ஆதரவு மற்றும் ஸ்டைலான வடிவமைப்புகளை வழங்குகின்றன. தரமான நர்சிங் பிராக்களில் முதலீடு செய்வது உங்கள் தாய்ப்பால் கொடுக்கும் அனுபவத்தையும் ஒட்டுமொத்த பிரசவத்திற்கு முன்பும், பின்பும் ஏற்படக்கூடிய உடல் ரீதியான மாற்றங்களுக்கும் துணை நிற்கின்றது.
நர்சிங் பிராக்களின் அம்சங்கள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளைப் புரிந்துகொள்வதன் மூலம், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சரியான நர்சிங் பிராக்களை நீங்கள் தேர்வு செய்யலாம். தாய்மைக்கான உங்கள் பயணத்தை மென்மையாகவும் வசதியாகவும் செய்யலாம்.
அம்சங்கள் | செயல்பாடுகள் | விளக்கம் |
நர்சிங் கிளாஸ்ப்ஸ் (Nursing Clasps) | சிரமம் இல்லாமல் ப்ரா கப்பை திறக்க உதவும் | பிராவை அகற்றாமல் வசதியாக தாய்ப்பால் கொடுப்பதற்காக கிளிப்கள், ஃப்ளாப்புகள் அல்லது டிராப்-டவுன் கப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. |
அட்ஜஸ்ட்டபில் ஸ்ட்ராப்ஸ் (Adjustable Straps) | கர்ப்பகாலத்தின் போது மாறிவரும் மார்பக அளவுகளுக்கு ஏற்ப வடிவமைக்கபட்ட ப்ரா. | அட்ஜஸ்ட்டபில் ஸ்ட்ராப்ஸ் இருக்கும் பிராக்கள் போடுவதன் மூலம் பிராக்களை தேவைக்கேற்ப சரி செய்து கொள்ளலாம். |
மென்மையான துணிகள் (Soft Fabric) | எரிச்சல் ஏற்படுத்தாத துணிகள் | மார்பக திசுக்களுக்கு எரிச்சலைக் குறைக்க பருத்தி அல்லது மூங்கில் போன்ற மென்மையான, சுவாசிக்கக்கூடிய பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. |
அகலமான பேண்டும் பல கொக்கிகளும் (Wide Bands and Hook & Eye Closure) | சரியான ஆதரவு மற்றும் தேவையான அளவு | முதுகு மற்றும் மார்பகங்களுக்கு ஆதரவாக கூடுதல் ஹூக்-அண்ட்-ஐ மூடல்களை உள்ளடக்கியது. |
மிருதுவான பேடிங் மற்றும் ப்ரா கப்ஸ் (Soft Bra Cups and Pads) | கசிவு-எதிர்ப்பு மற்றும் உறிஞ்சும் தன்மை கொண்ட ப்ரா கப்ஸ் | நர்சிங் பேட்களுக்கு இடமளிக்கவும், கசிவுகளைத் தடுக்கவும், உங்கள் மார்பகங்கள் உலர்வாக இருக்கவும், மிருதுவான பேடிங் அல்லது பாக்கெட்டுகளைக் கொண்டுள்ளது. |
நர்சிங் ப்ரா நன்மைகளும் வெவ்வேறு மகப்பேறு மாதங்களில் அதன் பலன்களும்
கர்ப்பத்தின் பல்வேறு நிலைகளுக்கு சரியான நர்சிங் பிராக்களைக் கண்டுபிடிப்பது மிகவும் அவசியம். ஆறுதலுக்கு முன்னுரிமை அளிக்கும் முதல் ட்ரைமெஸ்டரில் அணியும் நர்சிங் ப்ரா முதல், இரண்டாவது ட்ரைமெஸ்டரில் தேவையான சப்போர்டிவ் நர்சிங் பிராக்கள், மூன்றாவது ட்ரைமெஸ்டரில் அதிகபட்ச ஆறுதலையும் சரியான பொருத்தத்தையும் வழங்கும் பிராக்கள் வரை, ஒவ்வொரு கட்டத்திற்கும் பொருத்தமான பிராக்கள் தேவைப்படுகின்றன.
முதல் ட்ரைமெஸ்டர்
முதல் மூன்று மாத காலத்தில், உங்கள் உடல் முக்கியமான மாற்றங்களை எதிர்கொள்ளுகிறது, அதில் மார்பக வளர்ச்சி மற்றும் தாய்ப்பால் ஊட்டத்திற்காக அதிகரிக்கும் ஹார்மோன்களும் அடங்கும். இந்த காலத்தில் அடிக்கடி மன நிலை மாற்றங்கள், வாந்தி மற்றும் மயக்கம் போன்ற சிரமங்கள் இருக்கும். முதல் மூன்று மாதங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நீங்கள் சௌகரியமான பிராக்களை அணிய வேண்டும்.
இரண்டாவது ட்ரைமெஸ்டர்
இரண்டாவது ட்ரைமெஸ்டரில் உங்கள் மார்பகங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன, மேலும் உங்கள் மார்பகங்களில் மாற்றங்களையும் உணரலாம். இவை அனைத்தும் உங்களை தாய்ப்பால் ஊட்டுவதற்கு தயார் படுத்த உதவும். இந்த காலங்களில் வளர்ந்து வரும் மார்பகங்களுக்கு இடமளிக்கவும், கூடுதல் ஆதரவை வழங்கவும் ஒரு கப் அளவைப் பெரியதாகத் தேர்வு செய்ய வேண்டும். மார்பகங்களின் ஈரப்பதத்தை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் பிராக்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மூன்றாவது ட்ரைமெஸ்டர்
மூன்றாவது ட்ரைமெஸ்டரில் மார்பகங்கள் விரைவாக வளரக்கூடும். இதனால் சரியான பொருத்தம் மற்றும் அதிகபட்ச வசதியை வழங்கும் நர்சிங் பிராக்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம். தாய்ப்பால் கொடுப்பதற்குத் தயாராவதற்கும், நீங்கள் வசதியாக இருப்பதை உறுதி செய்வதற்கும் இவை முக்கியமானவை. மார்பகங்கள் பெரிதாகி கனமாக இருப்பதால் அசௌகரியத்தைத் தவிர்க்க சரியான அளவிலான ப்ரா அணிய வேண்டும். இந்த முக்கியமான கட்டத்தில் அதிகபட்ச வசதியை உறுதிப்படுத்த சிறந்த துணிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பிராக்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
சரியான நர்சிங் ப்ராவை தேர்வு செய்வது எப்படி?
முதலில் நீங்கள் பிரா அளவை தவறாமல் கணக்கிடுங்கள் (Measure your bra size) ஏனெனில் கர்பகாலங்களில் உங்களது மார்பக அளவுகளில் மாற்றங்கள் ஏற்படும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரா அளவை சரி பார்ப்பதன் மூலம் சரியான ப்ராவை தேர்ந்தெடுக்க முடியும்.
இரண்டாவதாக, உங்கள் மார்பகங்களுக்கு கச்சிதமாய் இருக்கும் ஸ்டைல்ஸ் மற்றும் டிசைன்களை தேர்வு செய்யவேண்டும். அதுமட்டும் அன்றி உங்களுக்கு பிடித்தமான, உடலுக்கு ஏற்றவாறு இருக்கும் பருத்தியினால் ஆனா நர்சிங் பிராக்களை தேர்ந்தெடுக்கவும். முக்கியமாக உங்களுக்கு வசதியாக இருக்குமா என்பதை சரி பார்த்துக்கொள்ளவேண்டும். இறுதியாக நர்சிங் பிராக்களை நீங்கள் கர்ப்பமாக இருக்கும்பொழுதே உபயோகிக்க ஆரமித்து விடுங்கள்.அவை வளரும் மார்பகங்களுக்கு ஏற்றவாறு சௌகரியமாக இருக்கும்.
நர்சிங் ப்ராவின் பல வகைகள் மற்றும் அவற்றின் பலன்கள்
ஸ்லீப் நர்சிங் பிராக்கள் (Sleep Nursing Bras) | இரவு நேரங்களில் வீட்டில் அணிந்துக்கொள்ள வசதியாக இருக்கும். |
அண்டர்வயர் நர்சிங் பிராஸ் (Underwired Nursing Bras) | அழகிய தோற்றமும் தேவையான சப்போர்ட்டும் தரும். |
வயர்லெஸ் நர்சிங் பிராக்கள் (Wireless Nursing Bras) | மென்மையாக, அணிந்திருப்பது தெரியாமல் நல்ல தோற்ற்றதுடன் இருக்கும். |
ஸ்போர்ட்ஸ் நர்சிங் ப்ராகள் (Sports Nursing Bras) | விளையாடும் பொழுதும், உடற்பயிற்சி செய்யும் பொழுதும் உபயோகபடுத்தும் ப்ரா. |
பம்ப் பிராக்கள் (Pump Bras) | எளிதில் தாய்ப்பால் பம்ப் செய்ய உதவும் படியான டிசைனில் தயாரிக்கப்பட்டது. |
மகப்பேறு/நர்சிங் டேங்க் டாப்ஸ் (Nursing Tank Tops) | தாய்ப்பால் கொடுப்பதற்கு வசதியாக இருக்கும் மேலாடை. |
சீம்லெஸ் நர்சிங் பிராக்கள் | பிரா அணிந்திருப்பது வெளியே தெரியாதவாறு அமைக்கப்பட்டிருக்கும் பிராக்கள். |
கன்வெர்ட்டிபிள் நர்சிங் பிராக்கள் (Convertible Nursing Bras) | இந்த பிராக்களில் உள்ள ஸ்ட்ராப்ஸ் உங்கள் ஆடைக்கு ஏற்றவாறு ஸ்டைல் செய்ய உதவும். |
லேஸ் நர்சிங் பிராஸ் (Lace Nursing Bras) | அழகிய லேஸ்களால் ஆன நர்சிங் பிராக்களை விழா காலங்களில் அணியலாம். |
பிளஸ் சைஸ் நர்சிங் பிராக்கள் (Plus-Size Nursing Bras) | பெரிய மார்பகங்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ள பிராக்கள். |
பொதுவாக நர்சிங் பிராக்கள் வாங்கும்போது அனைவரும் செய்யும் தவறுகள் மற்றும் அவைகளை தவிர்க்கும் வழிகள்
பொதுவாக நர்சிங் பிராக்கள் வாங்கும் பெண்கள் அதன் அளவுகளை தேர்ந்தெடுப்பதில் தவறு செய்வார்கள். அதை தவிர்க்க, நீங்கள் ப்ரா பிட்டிங் நிபுணர்களிடம் (bra fitting experts) அளவுகளை உறுதிசெய்து, தாய்ப்பால் கொடுக்கும் போது வரும் மார்பக மாற்றங்களை நினைவில் கொண்டு சிறந்த அம்சங்களைக் கொண்ட பிராக்களைத் தேர்ந்தெடுக்கவும்.
சரியான ப்ரா அளவை தேர்வு செய்யாமல் இருப்பது
✘ ப்ரா அளவை கணக்கிடாமல் வெறும் யுகங்களின் அடிப்படையில் பிராக்கள் வாங்குவது.
✓ துல்லியமாக அளந்து சரியான பிராக்களை பயன்படுத்தவும். தேவைப்பட்டால் ஒரு நல்ல ப்ரா பிட்டிங் நிபுணரை சந்தித்து ப்ரா அளவை தேர்வு செய்யவும்.
சரியான நேரத்தில் ப்ரா வாங்காமல் இருப்பது
✘ கற்பமானதும் பிராக்களை அளந்து பார்த்து வாங்காமல் இருப்பது அல்லது பிரசவத்திற்கு பின் தாய்ப்பால் ஊட்டும் போது நர்சிங் ப்ரா அணியாமல் இருப்பது தவறு.
✓ இரண்டாவது அல்லது மூன்றாவது ட்ரைமிஸ்டரில் கட்டாயமாக பிரெக்னென்சி ப்ராக்கள் அணியவேண்டும்.
வசதியான பிராக்களை விட அழகான பிராக்களை தேர்ந்தெடுப்பது
✘ ப்ராக்களின் செயல்பாடுகளை அறியாமல் வெறும் அழகிய வடிவமைப்பிற்காக வாங்குவது.
✓ உண்மையில் ப்ராக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, தாய்ப்பால் ஊட்ட வசதியாக இருக்கும் பிராக்களை வாங்கவேண்டும்.
தேவைக்கு ஒரு ப்ரா மட்டுமே வாங்கிக்கொள்வது
✘ ஒரு நர்சிங் ப்ரா மட்டும் வைத்திருப்பது மாற்றுவதற்கு வேறு பிராக்கள் இல்லாமல் போய்டுவிடும்.
✓ குறைந்தது மூன்று நர்சிங் பிராக்கள் வைத்திருப்பது அவசியம். ஒன்று அழுக்கானாலும் மற்றோன்று இருந்தால் மாற்றி அணிவதற்கு வசதியாக இருக்கும்.
தாய்ப்பால் சுரப்பதை கவனத்தில் கொள்ளாமல் இருப்பது
✘ பிராக்களில் உறிஞ்சும் தன்மை இல்லாமல் இருப்பது.
✓ நீங்கள் வாங்கும் நர்சிங் பிராக்களில் பிரெஸ்டு பேட்ஸ் அல்லது நர்சிங் பேட்ஸ் வைப்பதற்கு வசதியாக இருக்குமாறு பார்த்து வாங்கவேண்டும். அவை தாய்ப்பால் சுரக்கும்போது ஆகும் கசிவுகளை உறிஞ்சி கொள்ள உதவுகின்றன.
உடலில் நடக்கும் மாற்றங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது
✘ பிரசவத்திலும் அதன்பின் குழந்தை பிறந்ததும் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொள்ளாமல் பிராக்கள் வாங்குவது.
✓ ஒவொருபெண்ணிற்கும் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஏராளம். அதுவும் குழந்தை பிறந்த சில நாட்களில் அதிகமான மாற்றங்கள் தோன்றும். எனவே அவைகளை கருத்தில் கொண்டு பிராக்கள் வாங்கவேண்டும்.
நர்சிங் பிராக்களை எப்படி பராமரிக்க வேண்டும்?
உங்கள் நர்சிங் ப்ராக்களின் பயன்பாட்டை நீடிக்க சரியான ப்ரா பராமரிப்பு உதவி குறிப்புகளை படிக்கவும். நீங்கள் வைத்திருப்பதை பொறுத்து பல மாதங்களுக்கு பிராக்கள் நன்றாக இருக்கும்.
சரியான ப்ரா சைஸ் மற்றும் நல்ல குவாலிட்டியில் இருக்கும் பிராக்களை அணிவதனால் உங்கள் மார்பகங்களுக்கு தேவையான சப்போர்ட் கிடைக்கிறது. எனவே தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தங்களுக்கு ஏற்றவாறு நல்ல பிராக்களை தேர்நதெடுக்க வேண்டும்.
இந்த பதிவை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
அகராதி
Bra – ப்ரா/பிரா – உள்ளாடை /மார்புக்கச்சை
Pregnancy – கருவுற்ற நிலை
Straps – வார்கள்
Band – பட்டை
Hook and Eye – கொளுக்கியும் கண்ணும்
Breastfeeding/Nursing – தாய்ப்பால் ஊட்டல்
Trimester – மூன்று மாதக் காலம்
First Trimester – கருவுற்ற முதல்மூன்று மாதங்கள்
Second Trimester – கருத்தரிப்பில் இரண்டாவது மூன்றுமாத பருவம்
Third Trimester – மூன்றாம் மும்மாதக் காலம்
Design – வடிவமைப்பு
Styles- பாணிகள்
Fitting Experts – பொருத்தும் நிபுணர்கள்
Hormone – வளரூக்கி
Baby Bump – புடைப்பு
Fastener – இணைப்பான்
Clasp – இறுக்கிப் பிடிப்பி
Breast Pump – கொங்கையெஃகி