
பெண்கள் பிரா அணிவது ஏன்? உண்மையான காரணங்கள்
ப்ரா என்பது பெண்களின் உள்ளாடை வகைகளில் முக்கியமான ஒரு பகுதியாகும். பிரா அணிவது மார்பகங்களை ஆதரித்து தொடர்ச்சியான சௌகரியம் அளிக்கிறது. இது ஆதரவு அளிப்பதோடு மட்டும் இல்லாமல், மார்பகங்களை ஒழுங்காகவும், அழகாகவும் , நேர்த்தியாகத் தோன்றும்படி வடிவமைக்க உதவுகிறது.மார்பகங்களின் எடையை தாங்கிக்கொள்கிறது
பிரா அணிவதன் மூலம் உங்கள் மார்பகங்களுக்கு தேவையான சப்போர்ட் மற்றும் கம்போர்ட் கிடைக்கிறது. உங்கள் மார்பகங்களின் எடையை பிரா தாங்கிக்கொள்வதன் மூலம் நீங்கள் தினசரி வேலைகளை மகிழ்ச்சியாக தொடரலாம்.தன்னம்பிக்கையும் மன உறுதியும்
கரெக்ட் சைஸ் பிரா (Correct size bra) அணிவதன் மூலம் நீங்கள் தன்னம்பிக்கையுடன் தினசரி வேலைகளை செய்யலாம். உங்கள் மார்பகங்களுக்கு தேவையான சப்போர்ட் கிடைப்பதால், நீங்கள் எந்த ஆடை அணிந்தாலும் அழகான தோற்றதை தரும். அழகான ஆடை மற்றும் அழகான தோற்றம் இருந்தால் தன்னம்பிக்கையும் மன உறுதியும் சேர்ந்தே வந்துவிடும் அல்லவா?அசௌகரியங்களை தவிர்க்க உதவும்
பெண்களின் ஹார்மோன்கள் எப்படி மாறும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. பீரியட்ஸ் ஹார்மோன்கள், பிரக்னன்சி ஹார்மோன்கள், மெனோபாஸ், என பல விதமான காரணங்களால் மார்பகங்களில் வலி (breast pain) மற்றும் அசௌகரியம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பிரா அணிவதன் மூலம் இந்த அசௌகரியங்களை தவிர்க்க முடியும்.அழகிய தோற்றத்தை தருகிறது
